உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு

 இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு

அரியலுார்: அரியலுார் மாவட்டம், இலையூரில் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் மூலவரான லிங்கம் மரகதமாகும். நேற்று முன்தினம் மாலை, பிரதோஷத்தையொட்டி லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், அதே கிராமத்தை சேர்ந்த குருக்கள் கலியபெருமாள், 81, கோவிலை பூட்டி, சாவியை தலைக்கு அடியில் வைத்து அங்கேயே உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது சாவியை காணவில்லை. கோவிலில் கதவு திறக்கப்பட்டு, மரகத லிங்கம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. பெரம்பலுார் எஸ்.பி., விஷ்வேஷ் பா.சாஸ்திரி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., ரவிச்சக்கரவர்த்தி, ஹிந்து சமய அறநிலைத்துறை ஜெயங்கொண்டம் செயல் அலுவலர் சிவனேயசெல்வன் உள்ளிட்டோர் கோவிலில் ஆய்வு செய்தனர். போலீசார், சிலையை திருடிய மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
டிச 20, 2025 07:27

வருத்தமான செய்தி! இந்து விரோத நடவடிக்கைகள் அதிகமாகி விட்டன! அரசு கண்டு கொள்ளாது!


புதிய வீடியோ