உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தாடியை சேவ் செய்ய கணவர் மறுப்பு; மைத்துனருடன் ஓடிப்போன மனைவி

தாடியை சேவ் செய்ய கணவர் மறுப்பு; மைத்துனருடன் ஓடிப்போன மனைவி

மீரட்: உத்தர பிரதேசத்தில், தாடியை 'க்ளீன் சேவ்' செய்ய கணவர் மறுத்ததால் அதிருப்தி அடைந்த மனைவி, மைத்துனருடன் ஓடிப்போன சம்பவம் நடந்துள்ளது.உ.பி.,யின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜாகிர் என்பவருக்கும், அர்ஷி என்பவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முகமது ஜாகிர் அதிகளவு தாடி வளர்த்திருந்தார். அதை 'க்ளீன் சேவ்' செய்யும்படி அர்ஷி பலமுறை வலியுறுத்தினார். ஆனால் இதை முகமது ஜாஹிர் ஏற்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதற்கிடையே முகமது ஜாஹிர் சகோதரர் ஷபிருடன், அர்ஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது, காதலாக மாறியது. தாடி வளர்க்க விரும்பாத ஷபிர் 'ட்ரிம்' செய்து பராமரித்து வந்தார். கடந்த பிப்ரவரியில் ஷபிருடன் அர்ஷி ஓடிப் போனதாகக் கூறப்படுகிறது.மூன்று மாதங்களாகியும் மனைவி வீட்டுக்கு வராததை அடுத்து போலீசில் முகமது ஜாஹிர் புகார் அளித்தார். அதில் 'நான் தாடி வளர்ப்பது அர்ஷிக்கு பிடிக்கவில்லை. என் சகோதரர் ஷபிருடன் அவர் ஓடிவிட்டார். என்னை கொல்ல அவர்கள் சதித்திட்டம் போட்டுள்ளனர்' என முகமது ஜாஹிர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கிடையே பெற்றோர் வீட்டுக்கு ஷபிருடன் அர்ஷி சமீபத்தில் வந்தார். இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அர்ஷியின் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.'முகமது ஜாஹிருடன் வாழ விருப்பமில்லை. தாடி தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை. அவர் பாலியல் ரீதியாக தகுதியற்றவர். ஷபிருடன் வாழ விரும்புகிறேன்' என போலீசாரிடம் அர்ஷி கூறினார். இதைக் கேட்டு மனமுடைந்த முகமது ஜாஹிர் போலீசார் முன்னிலையில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaran
மே 04, 2025 23:12

ஒரு பக்கம் இது போன்று சம்பவங்கள் நடக்கிறது... இன்னொரு பக்கம் பாலியல் துன்புறுத்தல் என்கிறார்கள் .. ஒன்னும் புரியல...


India our pride
மே 04, 2025 18:44

கேவலமான கலாச்சாரம்.


Thiyagarajan S
மே 03, 2025 22:46

தலாக் தலாக் தலாக் தத்தலாக் தலாக் தலாக்


muthu
மே 03, 2025 06:13

It is now a day fashion to keep clean shave by muslim against islam practice. Can anyone clarify this quoting Holy quran


அப்பாவி
மே 02, 2025 12:13

பெண்களுக்கு தலாக் செய்யும் உரிமை உண்டா? இல்லேன்னா குடுக்க ஏற்பாடு செய்யணும்.


Keshavan.J
மே 02, 2025 12:03

இதல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.


Sundaran
மே 02, 2025 08:24

எல்லா பெண்களும் இவரை பின்பற்றுங்கள்.


mohanamurugan
மே 02, 2025 07:13

ஒவ்வொருவருக்கும் தனக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழவோ வாழாமல் இருக்கவோ உரிமை உள்ளது. எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் அவர்கள் சேர்ந்து வாழலாம் அல்லது வாழாமல் இருக்கலாம் அது உங்களுடைய தனிப்பட்ட உரிமை. வேலை இல்லாதவன் தான் யார் யாரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான்


MUTHU
மே 02, 2025 11:15

உன் வீட்டு ஆட்கள் இதை போன்ற குசும்பு செய்யும்பொழுது இதே தத்துவத்தை கூறுவாயா என்ன?.


முக்கிய வீடியோ