உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / புது ரக மாம்பழத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் பெயர் சூட்டிய கலிமுல்லா

புது ரக மாம்பழத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் பெயர் சூட்டிய கலிமுல்லா

லக்னோ: நம் நாட்டின், 'மாம்பழ மனிதன்' என போற்றப்படும் கலிமுல்லா கான் என்ற விவசாயி, தன் பழத்தோட்டத்தில் விளைவித்த புதிய வகை மாம்பழத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை குறிப்பிடும் வகையில், 'ராஜ்நாத் ஆம்' என பெயர்வைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மாலிஹாபாதை சேர்ந்தவர் கலிமுல்லா கான், 80. விவசாயியான இவர், தோட்டக்கலை மற்றும் பழ வளர்ப்பில் அதிக ஈடுபாடு உள்ளவர். தன் தோட்டத்தில் மட்டும், 300க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

'ராஜ்நாத் ஆம்'

இவரது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2008ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கலிமுல்லா கான், தான் விளைவிக்கும் புதிய மாம்பழங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு பிரபலங்களின் பெயர்களை வைத்துஉள்ளார்.இந்த வகையில், சமீபத்தில் புதிய மாம்பழ வகையை விளைவித்துள்ள இவர், அதற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை குறிப்பிடும் வகையில், 'ராஜ்நாத் ஆம்' என பெயரிட்டுள்ளார்.இதுகுறித்து கலிமுல்லா கான் கூறியதாவது:நம் நாட்டிற்கு அர்த்தமுள்ள வகையில் சேவையாற்றும் நபர்களின் பெயர்களை, நான் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு வைத்து வருகிறேன். இப்பெயர்கள், பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும். சில சமயங்களில், தலைவர்களின் பெயர்களை கூட மக்கள் மறந்துவிடுவர். எனினும், என் மாம்பழத்தின் வாயிலாக தலைவர்களின் செயல்பாடு கள் நினைவுக்கு வரும்.

விரும்புகிறேன்

சமீபத்தில் நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், போர் பதற்றத்தை தவிர்த்து ராஜ்நாத் சிங் அமைதியை விரும்பினார். அவரது செயல்பாட்டை பாராட்டி, என் புதிய மாம்பழ வகைக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை வைத்துள்ளேன். என் இறப்பிற்கு பின், இதுபோன்ற பல்வேறு வகை மாம்பழங்களை மக்கள் விரும்பி உண்பதையே நான் விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kumar
ஜூன் 09, 2025 11:18

சூப்பர் பாய், ஆப் இந்தஸ்தானி அச்சா பாய்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 07, 2025 14:22

அப்படியே ஸ்டாலின் ஆம் கருணாநிதி ஆம் உதயநிதி ஆம் இதெல்லாம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது தமிழகம். நிறைவேற்றுவீர்களா


V RAMASWAMY
ஜூன் 07, 2025 18:58

கண்டிப்பாக செய்யக்கூடும், அதையும் மாடல் அரசு சாதனைகளில் சேர்த்துக்கொள்ளலாம்..


கண்ணன்
ஜூன் 07, 2025 10:51

இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் ஆனால் உழைப்பில் நாட்டம் வைத்து, வாழ்க்கைமுறையினைச் செவ்வன் செய்கிறார். ஆனால் ஏழாம் வகுப்பைத் தாண்டாத பலர் இங்கே அரசியல் என்னும் பெயரில் கோமாளித்தனமான அறிக்கைகள் விட்டு, உண்டியல் குலுக்கி வாழ்கை நடத்துகின்றனர். இப்படிப்பட்டோர் வெட்கித் தலைகுனிந்து, தமது பாதைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்


புரொடஸ்டர்
ஜூன் 07, 2025 09:10

"சிந்தூர் மாம்பழம்" என பெயர் மாற்றம் செய்ங்க பாய்.


Sampath
ஜூன் 07, 2025 07:19

நன்றியும் வாழ்த்துக்களும்


sasikumaren
ஜூன் 07, 2025 05:51

தான் படைத்த மாம்பழ வகைகளுக்கு தகுதியான பெயர்களை தேடி தேடி வைக்கும் இந்த பெரியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஆனால் இங்கு மக்கள் பணத்தை சுரண்டி திங்கும் அரசியல் பெருச்சாளிகள் தங்கள் திருட்டு குடும்பத்தினர் பெயரை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறான்கள்


தமிழன்
ஜூன் 07, 2025 08:29

எங்கயோ செம்மையா வாங்கியிருக்காப்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை