உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  அம்மனை குலதெய்வமாக வழிபடும் இஸ்லாமியர்கள்

 அம்மனை குலதெய்வமாக வழிபடும் இஸ்லாமியர்கள்

உசிலம்பட்டி: சீலைக்காரி அம்மனை இஸ்லாமியர்கள் வழிபடும் மதநல்லிணக்க நிகழ்வு, உசிலம்பட்டி பகுதிகளில் ஆண்டுதோறும் நடக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியிலும், கருமாத்துார், பாப்பாபட்டி, வாலாந்துார், திடியன், ஆரியபட்டி, கொக்குளம், நாட்டாமங்கலம் கிராமங்களிலும், மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசிப்பச்சை, மாசிக்களரி குலதெய்வ வழிபாடு நடக்கும். பெருங்காமநல்லுார் கன்னியம்பட்டியில், 21 தெய்வங்களுடன் காத்தாண்டம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள சீலைக்காரி அம்மனை இஸ்லாமிய பெண்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். மாசிப்பச்சைக்கு வரும் இவர்களில் சிலர், சாமியாடி குறியும் சொல்கின்றனர். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் தரும் இஸ்லாமிய பெண்கள், தாங்களும் பூசிக்கொள்கின்றனர். உசிலம்பட்டி அருகே ஆனையூர் சின்ன கண்மாய் கரையில், வாடைப்பொடி கருப்பு கோவிலில், மாசிப்பச்சை வழிபாடு நடக்கும். இந்நிகழ்விற்கு மதுரையைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக வாடைப்பொடி வழங்கி வருகின்றனர். குலதெய்வ வழிபாட்டுக்காக, பூக்களை காயவைத்து இஸ்லாமியர்கள் தயாரிக்கும் வாடைப்பொடியை மட்டுமே வாங்க வேண்டும் என்ற முன்னோரின் வாக்கை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
பிப் 15, 2026 17:27

நீங்கள் எந்த மதம் என்று கடவுள் பார்க்க மாட்டார்


இந்து
பிப் 15, 2026 12:58

மகிழ்ச்சியான செய்தி. கலகக்காரர் காதிலே விழுந்து இங்கும் குன்றமாகிடப் போகிறது.முன்னெச்சரிக்கை தேவை.


புதிய வீடியோ