உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பஸ்சில் கிடந்த ஒரு லட்சம் ரூபாய்; போலீசில் ஒப்படைத்த நடத்துனர்

பஸ்சில் கிடந்த ஒரு லட்சம் ரூபாய்; போலீசில் ஒப்படைத்த நடத்துனர்

வெள்ளகோவில்: அரசு பஸ்சில் கிடந்த ஒரு லட்சம் ரூபாயை, போலீசில் ஒப்படைத்த நேர்மையான தனியார் பஸ் நடத்துனரை அனைவரும் பாராட்டினர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறை, வெள்ளபெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 65. இவர் வெள்ளகோவில் - முத்துார் அருகே உள்ள ராசாத்தாள் வலசு பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் சங்கர், 33, என்பவரது தென்னந்தோப்பை, குத்தகைக்கு எடுத்த வகையில், மீதி தொகையை ஒரு லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு, தனியார் பஸ்சில் நேற்று மதியம் ஏறினார். நத்தக்காடையூரில் இறங்கிய அவர், பணப்பையை மறந்து சென்று விட்டார். இதற்கிடையில், தாராபுரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, நடத்துனர் மகேந்திரன், அந்தப்பையை எடுத்து பார்த்துள்ளார். அதில், பணம் இருக்கவே, டிரைவர் ராஜாவுடன் இணைந்து, பணப்பையை தாராபுரம் போலீசில் ஒப்படைத்தார். பையில் இருந்த சங்கர் என்பவரின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர். பஸ்சில் கிடந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த தனியார் பஸ் ஊழியர்கள் மகேந்திரன் மற்றும் ராஜா ஆகியோரை, இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) சரவணன் மற்றும் போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ