உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் சொத்து உ.பி.,யில் ரூ.1.38 கோடிக்கு ஏலம்

பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் சொத்து உ.பி.,யில் ரூ.1.38 கோடிக்கு ஏலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாக்பட் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு சொந்தமாக உத்தர பிரதேசத்தில் இருந்த பூர்வீக சொத்து, 1.38 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். இவர் கடந்தாண்டு காலமானார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் டில்லியில் பிறந்த இவர், நாடு பிரிக்கப்பட்ட பின், தன் பெற்றோருடன் பாகிஸ்தான் சென்றார். இருப்பினும், அவரது தாத்தா உத்தர பிரதேசத்தின் பாக்பட் மாவட்டத்தில் உள்ள கோட்டனா கிராமத்தில் வசித்து வந்தார்.இந்நிலையில், முஷாரப்புக்கு சொந்தமான கோட்டனாவில் இருந்த 2 ஹெக்டர் பரப்பளவு உடைய சொத்தை, கடந்த 2010ல் எதிரி சொத்தாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற அவரது இந்திய சொத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எதிரி சொத்துக்களை நிர்வகிப்பவர்களின் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த சொத்து நேற்று ஏலம் விடப்பட்டது.இது குறித்து பாக்பட் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: முஷாரப்பின் தாத்தா கோட்டனாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அதன்பின் அவரது மாமா நீண்ட காலமாக இங்கு இருந்தார். அவர்கள் வசித்து வந்த கட்டடத்தின் ஒரு பகுதி முஷாரப் மற்றும் அவரின் பெற்றோருக்கு சொந்தமாக இருந்தது. எதிரி சொத்தாக கருதப்பட்ட அது, நேற்று ஏலம் விடப்பட்டது. ஆவணங்களின்படி, முஷாரப் பெயர் அதில் இல்லை. சிறுவயதில் அவர் 'நுரு' என அழைக்கப்பட்டதால், அந்தப் பெயரே ஆவணங்களில் உள்ளன. இதன் ஆரம்ப விலை, 39.06 லட்சமாக இருந்தது. இந்த சொத்து, 1.38 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthikeyan
செப் 08, 2024 15:07

இண்டி கூட்டணி பாரதத்திற்கு என்ன நண்மை செய்துள்ளது...? கோமாளிப் பயல்கள்...இப்ப தலைவராக இருக்கின்ற கன்னடத்துக்காரனை நல்லா பாருங்கள்...பிசாசு மாதிரியே தெரிவான்... இவனுங்கெல்லாம் ஆட்சி செய்தால் நாடு விளங்குமா?


S. Gopalakrishnan
செப் 07, 2024 13:53

முதுகெலும்பு இல்லாத காங்கிரஸ் இத்தனை வருஷமாக இதை கண்டுகொள்ளாமல் இருந்தது கேவலமாக இருக்கிறது !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை