உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கூழாங்கற்களால் டி.வி.ஆர்., ஓவியம்

கூழாங்கற்களால் டி.வி.ஆர்., ஓவியம்

தொப்பம்பட்டி: தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 118வது பிறந்த நாள் விழா அக்.,2ல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தும்பலப்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 11 பேர் இணைந்து, டி.வி.ஆர்.,ன் ஓவியத்தை கூழாங்கற்களால் உருவாக்கி கவுரவித்து உள்ளனர். டி.வி.ஆர்., 118 வயதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு மாணவரும் தலா 118 கூழாங்கற்களை சேகரித்து 1298 கற்களை பயன்படுத்தி உள்ளனர். தாமரை பூவுடன் கூடிய இந்த ஓவியத்தை 6 அடி அகலம், 20 அடி உயரத்தில் 6 மணி நேரத்தில் உருவாக்கி உள்ளனர். மாணவர்களை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் சுதாகர்சாமி, செயலாளர் ராமசாமி, பொருளாளர் சுகுமாரன், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜூ, ஓவிய ஆசிரியர் விஜி, நிர்வாக மேலாளர் தேனரசு பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை