உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / விநாயகர் கோவிலில் தொழுகை: போதை வாலிபர் அட்ராசிட்டி

விநாயகர் கோவிலில் தொழுகை: போதை வாலிபர் அட்ராசிட்டி

திருப்பூர்: திருப்பூரில், விநாயகர் கோவில் நுழைவாயிலில் அமர்ந்து போதை வாலிபர் தொழுகை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரத்தில் ராஜ கணபதி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை போதையில் இருந்த வாலிபர் ஒருவர், கோவில் நுழைவாயில் முன் அமர்ந்து தொழுகை நடத்தினார். பூசாரி நாகநாதன் மற்றும் பக்தர்கள் சிலர், வாலிபரை வெளியே செல்லுமாறு கூறியபோது, வாக்குவாதம் செய்துள்ளார். மக்களின் உதவியோடு வாலிபரை வெளியேற்றினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர். கோவிலில் தொழுகை நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கூறியதாவது: கோவிலில் போதையில் தொழுகை நடத்தியது, பூச்சக்காடு, நான்காவது வீதியைச் சேர்ந்த அஜ்மல் கான், 21, என தெரிந்தது. ராஜகணபதி கோவில் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்கு போதையில் சென்றுள்ளார். அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அதன்பின், கோவிலுக்குள் சென்ற அவர் தொழுகை செய்தார். கோவில் தரப்பில் புகார் கொடுக்கவில்லை. அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு செய்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekar Jayaraman
அக் 29, 2025 03:27

இந்துக்கள் அவர்கள் (தீவிரவாதி) முறையில் பதில் சொன்னால் மட்டுமே இது நடக்காது.


Haja Kuthubdeen
அக் 28, 2025 19:54

இந்த செய்தி விசயமாக என் கடைசி பதிவு...முஸ்லிம் பெயர்தாங்கி குடியன் செய்த செயலுக்கு கடும் கண்டனம்.அதோடு அவன் தொழுகை நடத்தினான் என்பது ஒரு தவறான கருத்து.ஒரு குடிகாரனுக்கு தொழுகை எப்படி செய்யனும் என்பதே அறியாது.. தொழுகை பள்ளியில் கூட்டத்தோடு சேர்ந்து தொழுவது ஒரு முறை..அதில் சிறு சத்தம் கூட எழக்கூடாது.பள்ளி செல்ல முடியாதவர்கள்..வேலை..பயணத்தில் இருப்போர் மட்டும் தனியாக தொழுவது அடுத்த முறை..இரண்டு தொழுகைக்கும் உடல்..உடை சுத்தம் மிக அவசியம்.தனியாக தொழுபவருக்கு கண்டிப்பாக குர்ஆனின் சில வசங்கள் மனப்பாடம் அவசியம்.ஹிந்து சகோதரர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.அவர்கள் தெரிந்து கொள்ளனும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு...


அப்பாவி
அக் 28, 2025 09:31

சுண்டல் குடுத்து அனுப்புங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை