உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை போலீசாரின் வெடிக்காத துப்பாக்கி

 பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை போலீசாரின் வெடிக்காத துப்பாக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வில், அவரது உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்ட போது, போலீசாரின் துப்பாக்கி பழுதாகி, தோட்டா வெடிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கடந்த, 27ம் தேதி இறந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக, துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதை வழங்கப்படும் என, முதல்வர் விஜய் அறிவித்தார். நேற்று பாக்யராஜ் உடலுக்கு பெசன்ட்நகர் மயானத்தில், இறுதி சடங்கு நடந்தது. அப்போது, தமிழக காவல்துறை சார்பாக, காவலர்கள் அணிவகுத்து நின்று, துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அந்த நேரத்தில், முதல் மற்றும் இரண்டாவது வரிசையில் நின்ற காவலர்களின் துப்பாக்கி வேலை செய்யவில்லை. இரண்டு காவலர்களின் துப்பாக்கிக்குள் தோட்டா சிக்கிக் கொண்டது; அவர்களால் சுட முடியவில்லை. எனினும், அவர்கள் சுதாரித்து கொண்டு, சுடுவது போன்று துப்பாக்கியை மேல்நோக்கி காண்பித்து சமாளித்தனர். இது, வீடியோவில் தெளிவாக தெரிந்தது. ஒரு அரசு மரியாதை நிகழ்வில், துப்பாக்கிகள் சரியாக வேலை செய்யாதது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சண்முகம்
ஜூன் 29, 2026 17:36

எல்லாமே வெறும் சத்தம் மட்டும் போடும் வெத்து துப்பாக்கி.


chandran
ஜூன் 29, 2026 16:27

ஒரு போலீஸ் தோட்டாவை துப்பாக்கியில் போட்ட பின்னர் cock பண்ணவே இல்ல.


SUBRAMANIAN P
ஜூன் 29, 2026 14:04

முன்னபின்ன எடுத்து சுட்டிருந்தல்லா வெடிக்கும்.. பலவருடமா தூக்கிகிட்டு இருக்கு துப்பாக்கிகள் போலீஸ் போலவே


SUBRAMANIAN P
ஜூன் 29, 2026 14:03

முந்தைய செயல்படாத அரசு போலவே போலீசாரின் துப்பாக்கிகளும். இனிமேலாவது சுடுற துப்பாக்கிகளை வையுங்கய்யா. திருட்டுப்பயலுகளுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு, இனிமே நிறைய இடத்துல கொள்ளை நடக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 29, 2026 11:38

சினிமா ஷூட்டிங் ன்னு நினைச்சிருப்பாங்க


JeevaKiran
ஜூன் 29, 2026 10:28

துப்பாக்கியின் நிலைமை இப்படி இருப்பதால்தான் குற்றவாளிகள் தப்பிக்கிறார்களா?


அப்பாவி
ஜூன் 29, 2026 08:58

துப்பாக்கி, தோட்டாவையெல்லாம் ஆட்டையப்போட்டு வித்து தின்னிருப்பாங்க.. திராவிடனா கொக்கா?


முக்கிய வீடியோ