வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 06:25
வாழ்த்துக்கள் மாணவரே
சென்னை: சென்னை ஐ.ஐ.டி., யில் நேற்று முன்தினம், 'கேம்பஸ் பிளேஸ்மென்ட்' எனப்படும், வளாகத்தேடல் நிகழ்வு நடந்தது. இதில், 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், கேபிடல் ஒன், குவாண்ட் பாக்ஸ்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. அமெரிக்காவை சேர்ந்த, 'ஜேன் ஸ்ட்ரீட் டிரேடிங்' நிறுவனம், ஒரு மாணவருக்கு மாதம், 35.80 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணி வாய்ப்பை வழங்கி உள்ளது. இதன்படி, அவருக்கு ஆண்டு ஊதியமாக, 4.30 கோடி ரூபாய் கிடைக்கும். சென்னை ஐ.ஐ.டி., வரலாற்றில், அதிக சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகி உள்ள நபராக அவர் கருதப்படுகிறார். அவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வாழ்த்துக்கள் மாணவரே