உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சுபாஷ் சந்திரபோஸின் பாசத்திற்குரிய கேரளத்தின் வளர்ப்பு மகள் காலமானார்

சுபாஷ் சந்திரபோஸின் பாசத்திற்குரிய கேரளத்தின் வளர்ப்பு மகள் காலமானார்

பாலக்காடு: சிறுவயதில் பாங்காக்கிலுள்ள இந்திய தேசிய ராணுவ (ஐ.என்.ஏ) முகாமில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அன்பைப்பெற்று வளர்ந்தவரும், 'கேரளத்தின் வளர்ப்பு மகள்' என அழைக்கப்பட்டவருமான, ராதா, 88, காலமானார்.தாய்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் ராதா. இவர் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில், ஐ.என்.ஏ-.,வில் பணியாற்றிய கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி காரல்மண்ணையைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணப்பொதுவாள் -- நாராயணிக்குட்டி தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டார்.கடந்த, 1946ம் ஆண்டு, தனது ஏழாவது வயதில் கேரளத்திற்கு வந்த அவர், மலப்புரம் மாவட்டம் பூக்காட்டிரி பள்ளியில் கல்வி பயின்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளன்று, பள்ளி ஆசிரியர் பாலன் தேசியக்கொடியை இவரிடம் வழங்கி ஊர்வலத்தை வழிநடத்தச் செய்ததும், கோவிலுக்குள் அழைத்துச் சென்றதும் இவரை முழுமையான இந்தியராகவும், கேரளத்தின் மகளாகவும் மாற்றியது.சிறு வயதில், பாங்காங்கில் இருந்த போது, துாணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, தன்னை விளையாட்டாகப் பயமுறுத்திய நேதாஜியின் குறும்புகளையும், அவர் அன்புடன் வழங்கிய நாணயத்தையும் இறுதிவரை மறக்காத ராதா, போர்க்கால குண்டுவீச்சு அனுபவங்களையும் நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 1969-ல், ஆலிப்பறம்பு ராஜகோபாலன் நாயரைத் திருமணம் செய்து காரல்மண்ணையில் குடியேறினார். கணவர் ராஜகோபாலன் நாயர் மற்றும் மகன் ஹரிகோவிந்தன் ஆகியோர் ஏற்கனவே காலமாகி விட்ட நிலையில், மகள் ஸ்ரீலதா, மருமகன் பிரசாத் ஆகியோருடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக, நினைவாற்றல் இழந்திருந்த ராதாவின் மறைவோடு, சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மற்றுமொரு வாழும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சோலை பார்த்தி
நவ 13, 2026 22:51

அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வளர்த்த பிள்ளை


Abdul Rahim, karaikudi
நவ 13, 2026 16:08

இங்கே இருக்கும் வாடகை வாயன் ஒருத்தனும் வாய மூடிட்டு இருப்பானுக. திராவிடம்


NALAM VIRUMBI
நவ 13, 2026 11:54

ஓம் சாந்தி


sankaran
நவ 13, 2026 11:16

ஓம் சாந்தி இந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு நன்றி


R Vijayaraghavan
நவ 13, 2026 09:48

ஓம் சாந்தி


Subramanian
நவ 13, 2026 07:51

ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி


பிரேம்ஜி
நவ 13, 2026 07:06

அம்மையார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.


புதிய வீடியோ