உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் ஹாட்ரிக் வெற்றி

 உலக ஆணழகன் போட்டி: தமிழக வீரர் ஹாட்ரிக் வெற்றி

மதுரை: உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 16ம் உலக ஆணழகன் போட்டி நவ., 11ல் துவங்கி நேற்று முடிந்தது. இந்தோனேஷியாவில் நடந்த இப்போட்டியில், உலகின் பல நாடுகளில் இருந்தும் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்த ஆடவர் பிரிவில், 715 புள்ளிகள் பெற்று இந்திய அணி தங்கம் வென்றது. மகளிர் பிரிவில் 245 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில், 'மிஸ்டர் யுனிவர்ஸ்' பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சே ர்த்தார். இந்த பட்டத் தை இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnamurthy Venkatesan
நவ 17, 2025 20:36

அவர் முழு படத்தையும் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் நண்பரே.


Kumar Murugan
நவ 17, 2025 16:54

வாழ்த்துக்கள் சகோதரா


Shanmugam Palanisamy
நவ 17, 2025 13:33

இந்தியாவிற்கு பெருமை... தமிழகத்திற்கு கெளரவம்... நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமிதம்.... நல்வாழ்த்துகள்


Nanchilguru
நவ 17, 2025 13:03

இது ஒரு அற்புதமான சாதனை, உடற்கட்டமைப்பு பராமரிப்பது மிகவும் கடினமானது


shyamnats
நவ 17, 2025 08:04

பெரும் சாதனைக்கு வாழ்த்துக்கள் , தொடரட்டும்


சமீபத்திய செய்தி