மேலும் செய்திகள்
பாரம்பரிய விளையாட்டு போட்டி
15-Jan-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் துாக்கி போட்டியில் பரிசு பெற்றனர்.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது இளவட்டக்கல் துாக்கும் போட்டி நடத்தப்படுகிறது.ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே துாக்க முடியும் என்றிருந்த இளவட்டக்கல்லை சில ஆண்டுகளாக பெண்களும் துாக்கி சாதனை படைத்து வருகின்றனர். இளவட்டக்கல் 55, 60, 98, 114 மற்றும்129 கிலோ எடை கொண்டதாக உள்ளன. உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டது. வடலிவிளையில் நேற்று மாலை நடந்த போட்டியில் 55 கிலோ இளவட்ட கல்லை துாக்கிய ராஜகுமாரி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2வது இடத்தை தங்க புஷ்பம் பெற்றார். ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல் போட்டியில் முதல் பரிசை விக்னேஷ், 2வது பரிசை பாலகிருஷ்ணன் பெற்றனர்.
15-Jan-2025