மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
''ரொம்ப மழை வந்தாலும் சரி... வெயில் ஜாஸ்தி அடிச்சாலும் சரி... இதுதான் என்னோட விலாசமே,'' என்கிறார், சுந்தராபுரம் கோண்டீஸ் காலனியை சேர்ந்த மயூலா. இவர், டவுன்ஹால் மாநகராட்சி அருகேயுள்ள நடைபாதையில், ஏழு வருடங்களாக கடை வைத்திருக்கிறார். காப்பு, மெட்டி, குழந்தைகளுக்கான வளையல், கயிறு, சிறிய மணிகள், கடுக்காய், தலைக்கு குளிர்ச்சி தரும் மூலிகை எண்ணெய், ஜாதிக்காய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். எப்படி போகுது வாழ்க்கை?
என்னத்தைங்க வாழ்க்கை....வியாபாரம் தான் கண்ணு முன்னால வந்து நிக்குது. இருக்குற பொருள் எல்லாம் வித்தா தான், 300 இல்லேன்னா 400 ரூபா தினமும் பாக்க முடியும். காலையில வந்து உக்காந்தா சாயந்திரம் ஆயிரும். அப்புறம், இந்த பொருள மூட்ட கட்டி பஸ்ச புடிச்சு, வீட்டுக்கு போக வேண்டியதுதான். வருமானம் அதிகமாக கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
ஒரு நாளைக்கு நல்லா வியாபாரம் ஆனா, அப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். இதுபோல தெனமும் வியாபாரம் நடக்கணும்னு நெனச்சுக்குவேன். 600 இல்லேன்னா 700 ரூபா, ஒரு நாளைக்கு பாத்துட்டாலே திருப்தி தான். அந்த காச வெச்சு, தேவையான பொருள, வியாபாரத்துக்கு கொஞ்சம் அதிகமா வாங்கிக்கலாம். ஜனங்க அதிகமா வர்றதால இந்த இடத்துல இருக்கேன். வயிறுன்னு ஒன்னு இருக்குல்ல. அதுக்காக தான், மழை, வெயில்னு பாக்காம ஓடிட்டே இருக்கேன். நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், தனி தொழிலாக இருந்தாலும், பிறரை சார்ந்துதான் நம் வாழ்க்கையின் ஓட்டம் இருக்கிறது. களைத்து போய் ஓரிடத்தில் நிற்கும் போது, நமக்கு வயதாகி இருக்க வேண்டும் இல்லை, நாம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டையும் சமாளித்து வாழ்வதுதானே வாழ்க்கை!
30-Sep-2025