உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்: மைக்கில் எஸ்.பி., எச்சரிக்கை

மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்: மைக்கில் எஸ்.பி., எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிதம்பரம்: லாட்டரி விற்பனை விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளை, ஓபன் மைக்கில், 'மாமூல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, எஸ்.பி., வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி நசீர், 56, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க் வரை புகார் சென்றது. தொடர்ந்து, கடலுார் எஸ்.பி., ஜெயகுமார் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் நசீரை பிடித்தனர். இதில், போலீஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பல லட்சம் ரூபாய் மாமூல் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, சிதம் பரம் டி.எஸ்.பி., லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு உட்பட 7 பேர் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட ஏழு உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் மைக்கில் அழைத்தார் எஸ்.பி., ஜெயகுமார். அப்போது அவர் பேசுகையில், 'சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்து வந்தது தெரிகிறது. இதில் விதிவிலக்காக ஒரு சில அதிகாரிகள் மட்டும் நேர்மையாக பணியாற்றி வருகின்றனர். இனியும் லாட்டரி விற்பனையாளர்களிடம் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக, வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுவர். 'லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக மாமூல் வாங்குபவர்கள், பிச்சை எடுத்து சாப்பிடலாம்' என, கடுமையாக எச்சரித்தார். போலீசாரை, எஸ்.பி., மைக்கில் இப்படி பேசியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Tetra
செப் 07, 2025 20:23

பிச்சையா? அது அரசாங்கம் போடுவதல்லவா. இதுதான் அவர்களுக்கு சம்பளம்.


Tetra
செப் 07, 2025 20:21

த்ராவிட ஆட்"சீ" வாழ்க வாழ்க


Gajageswari
செப் 06, 2025 20:14

Buy/Borrow/beg/steal. இந்த வரிசையில்


Ramesh
செப் 06, 2025 15:44

அந்த 7 கோட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், திரு. எஸ் பி அவர்களே??


Shankar Ganesh
செப் 06, 2025 07:26

பணியிட மாற்றம் செய்தால் வாங்கிய மாமூல் மற்றும் லஞ்ச பணம் செல்லா காசு ஆகிடும்?


Yasararafath
செப் 05, 2025 22:39

கடலூர் எஸ் பி மைக்கேல் சரியான பதிலை சொல்லி இருக்கிறார்.


Padmasridharan
செப் 05, 2025 16:00

உண்மைதான் சாமி. இதுக்குதானே பலரும் இந்த வேலைக்கு சேர்றாங்க. எ. கா. சென்னை, திருவான்மியூர் காக்கி சட்டையை பயன்படுத்தி காவலர் சேகர் & கோ எல்லோரிடமும் பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ அதிகார பிச்சையெடுக்கிறார். கார்த்தி, செல்வராஜ் என்பவர் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்து இதே வேலையைத்தான் செய்கிறார்கள். கடைகளில் சல்யூட் அடித்து தினசரி மாமூலும் வாங்குகிறார்கள். இன்னும் ஒரு கூட்டம் கடற்கரைக்கு வருபவர்களிடம் ஒருமையில் அசிங்கமாக மிரட்டியடித்து, mobileஐ பிடுங்கி passwordஐ திறக்க வைத்து பணத்தை அதிகார பிச்சையெடுக்கிறார்கள். வண்டியில் கூட்டி அறைக்கும் அழைத்துச் சென்று காமத்தொல்லைகள் கொடுப்பதுமுண்டு. தைரியமாக காணப்படும் கோழைகள் பெயரையும் சொல்ல மாட்டார்கள், தங்கள் ஃபோன் நம்பர்களை கொடுக்காமல் டார்வின் என்ற பெயருக்கு transfer செய்ய சொல்வதுமுண்டு. கிட்டே இருக்கும் வால்மீகி நகர் HDFC ATMஇல் பணத்தை எடுத்து தரச் சொல்லும் அதிகார பிச்சைக்காரர்கள். கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பண பரிமாற்றம் செய்ய வைத்து காக்கி சட்டை காவலர்கள் அவர்களிடமிருந்து பெறுகிறார்கள். அந்த ஆடைக்கு மரியாதை கொடுப்பது ஒரு சிலரே. பசுத்தோல் போர்த்திய நிறைய நரிகள் குற்றவாளிகளாக ரோந்து வருகின்றனர்.


ஜான் குணசேகரன்
செப் 05, 2025 10:55

நீங்கள் போலீசாரை மாற்றலாம். ஆனால் லாட்டரி வியாபாரி நசீர் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர் நினைத்தால் ஒரே நிமிடத்தில் உங்களை மாற்றி விடுவார். ஞாபகம் இருக்கட்டும் இது திராவிட மாடல் ஆட்சி.


Muthu Krishnan
செப் 06, 2025 08:23

சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் மூன்று தினங்களில் வெளியே வந்து விடுவார், காவல் துறை வேலை முடிந்தது அவர் சம்பாரித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு இடுமா அரசாங்கம்


Ramesh Sargam
செப் 05, 2025 09:31

மிக மிக சரியாகத்தான் எஸ்.பி. கூறியிருக்கிறார். ஆனால் என்ன இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை கண்டால் திமுக அரசுக்கு பிடிக்காது. ஏன் என்றால் அந்த பிச்சையில் அவர்களுக்கும் ஒரு பகுதி செல்கிறது.


ராமகிருஷ்ணன்
செப் 05, 2025 09:21

விடியலின் ஆட்சியில் சாதனை தான். லஞ்சம் வாங்கி குவிக்கவே போலீஸ் வேலையில் சேரும் இந்த காலத்தில் இப்படி ஒரு போலீஸா.