உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / யு.பி.எஸ்.சி., தேர்வு; சாதனை சாத்தியமானது எப்படி? பனியன் தொழிலாளி மகன் அசத்தல்

யு.பி.எஸ்.சி., தேர்வு; சாதனை சாத்தியமானது எப்படி? பனியன் தொழிலாளி மகன் அசத்தல்

திருப்பூர்: திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் கஸ்துாரிபா வீதியை சேர்ந்த முருகன் - ஈஸ்வரி தம்பதி மகன் சுரேஷ்குமார், 24, தேசிய அளவில் யு.பி.எஸ்.சி., தேர்வில் 732வது இடத்தை பிடித்துள்ளார்.

சுரேஷ்குமார் கூறியதாவது:

அம்மாபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், 8ம் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின், அவிநாசி ராயர் கல்வி நிலையத்தில் தமிழ் வழிக்கல்வியில், பிளஸ் 2 தேர்வு எழுதினேன். அதன்பின், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், பி.இ., படித்தேன். இதற்கிடையில், மத்திய அரசின், தபால் துறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, வீரகேரளம் தபால் அலுவலகத்தில், தபால் அலுவலராக பணிபுரிந்து வந்தேன்.அதன்பின், சென்னை, அண்ணா நகரில் ஒரு அகாடமியில் பயிற்சி பெற்றேன். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் வாயிலாக உதவித் தொகையும் கிடைத்தது. தொடர்ந்து படித்து தேர்வெழுதி வெற்றி பெற்றேன். இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.சுரேஷ்குமாரின் பெற்றோர், அம்மாபாளையத்திலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அவரது சகோதரர் சந்தோஷ்குமார், 21, சென்னை அரசு பல் மருத்துவமனையில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

अप्पावी
ஏப் 25, 2025 10:52

ஒண்ணு பசையுள்ள குடுமமா இருக்கணும். இல்லே சமூகநீதி குடும்பமா இருக்கணும். நடுவிலே இருந்தா முன்னேறவே முடியாது. அம்பது வருசம் முன்னாடி என்னை ஏமாற்றிய மணிசுந்தர வையாபுரிகள் இன்னிக்கிம் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை