உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

சூலுார்: கணவன் இறந்த துக்கத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், விக்கிரம சிங்க புரத்தை சேர்ந்தவர் மாடசாமி,75. இவரது மனைவி வீரம்மாள்,70. இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சூலுார் அடுத்த கலங்கல் காவேரி நகரில் உள்ள மூத்த மகள் சூர்யா வீட்டில் வசித்து வந்தனர். மாடசாமி, உடல்நிலை பாதிப்பு காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எந்தவித முன்னேற்றம் இல்லாததால், வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். கடந்த, 7 ம்தேதி மாடசாமி இறந்தார். உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கணவர் இறந்த துக்கத்திலிருந்த , வீரம்மாளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மாடசாமியின் உடலை தகனம் செய்தனர். இதற்கிடையில், வீரம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ