தீ விபத்தில் சிக்கியோரை மீட்ட வாலிபருக்கு பதவி உயர்வு
தி.நகர்: தி.நகர் அடுக்குமாடி குடியிருப் பு தீ விபத்தில் சிக்கியோரை துணிச்சலாக மீட்ட வாலிபருக்கு, அவர் பணியாற்றும் மருந்து விநியோக நிறுவனம், மேலாளராக பதவி உயர்வு வழங்கியதோடு, 2 0,000 ரூபாய் ஊக்கப்பரிசும் தந்து கவுரவித்து உள்ளது. தி.நகர், ராமச்சந்திரா தெருவில், மூன்று மாடி உடைய அடுக்குமாடி குடியிருப்பின், இரண்டாவது தளத்தில், கடந்த 15ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீ மூன்றாவது மாடி வரை பரவியது. இதில், இரண்டு முதியோர் உட்பட ஆறு பே ர் சிக்கிக் கொண்டனர். அவ்வழியாக மருத்து விநியோகம் செய்ய சென்ற பாடியைச் சேர்ந்த விமல், 30, என்பவர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குழாய் வாயிலாக மே லே ஏறி, கதவை உடைத்து, மூன்றாவது மாடியில் சிக்கியோரை மீட்டு, மொட்டை மாடிக்கு அழைத்து சென்று காப்பாற்றினார். அவரது துணிச்சல் செயல் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவர் பணிபுரியும், 'எஸ்.ஜே.ஆர்., டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' எனும் மருந்து விநியோக நிறுவனம், அவருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கியதோடு, 20,000 ரூபாயை ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்துள்ளது.