உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கல்வியோடு மல்லுக்கட்டாதீர்கள்!

கல்வியோடு மல்லுக்கட்டாதீர்கள்!

வி.மீனாட்சி பட்டாபிராமன், முனைவர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தீர்மானிக்க வேண்டிய புதிய கல்விக் கொள்கையை, ஆளும் தி.மு.க., அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தீர்மானம் செய்து, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கை!ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்திலும் அரசியல் செய்வதே இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.'மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது' என்கிறார் உதயநிதி. அதற்கு அவர் சொல்லும் காரணம், ஹிந்தி படித்தால் தமிழ் மழுங்கிவிடுமாம்!முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஜெயலலிதா போன்றோர் பல மொழிகள் அறிந்தவர்கள். ஒரு மொழி கூடுதலாக கற்றதால், அவர்களது தாய்மொழி மழுங்கியதாக சரித்திரம் இல்லையே!'இது ஒவ்வொரு மாணவனின் உரிமைக்கான பிரச்னை என்பதால், ஆர்ப்பாட்டம் செய்கிறோம்' என்று கூறுகிறார்.ஆர்ப்பாட்டத்திற்கு முன் எத்தனை மாணவர்களை கலந்து ஆலோசித்தார்? மாணவர் பிரச்னை என்றால் மாணவர்கள் அல்லவா ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்? இதில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆன்மிக போராட்டத்தில் பங்கேற்றோர் அனைவரும் முருக பக்தர்களான ஆன்மிகவாதிகள். அதுபோல இப்போராட்டத்திலும், 'எங்களுக்கு ஹிந்தி வேண்டாம்' என்று சொல்லும் மாணவர்கள் அல்லவா பங்கேற்க வேண்டும்? உதயநிதிக்கு இங்கு என்ன வேலை? 'தமிழ் மொழியை காக்க உயிரை விடவும் தயாராக உள்ளோம்' என்று கூறுகிறார் உதயநிதி. உயிரை எல்லாம் விட வேண்டாம்; நீங்களும், உங்கள் தந்தையும், தமிழை பிழையில்லாமல் உச்சரித்தால் போதும்!கல்வியை அரசியலாக்கி, உங்கள் அரசியல் சதுரங்கத்தில் மாணவர்களை பகடைகளாக்கி, அவர்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள்.உங்கள் கட்சியினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அரசு பள்ளி மாணவர்களின் கல்வியோடு மல்லுக்கட்டாதீர்கள்!

செம்மலைக்கு தெரியாதா?

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேங்கைவயல் பிரச்னையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின் குற்றவியல் சட்டத்தின் கீழ் சாதாரண வழக்காக மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து, அந்த வழக்கின் வீரியத்தை நீர்த்து போகச் செய்துள்ளது, தி.மு.க., அரசு' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை, அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ன் படி, பிற இனத்தைச் சேர்ந்த ஒருவர், அவர்களுக்கு கொடுமைகள் செய்திருந்தால் மட்டுமே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய முடியும். ஆனால், வேங்கைவயல் சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் செய்தவர் யார், என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று தெரியாத நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.சம்பவம் நடந்தபோது, பதற்றமான சூழ்நிலையில் நிலைமையை சமாளிக்க, காவல்துறை அச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கலாம்.ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை செய்துள்ளனர்.பல ஆவணங்கள், மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்துள்ளனர்; குரல் மாதிரி மற்றும் டி.என்.ஏ., மரபணு சோதனைகளும் செய்துள்ளனர்.இவ்வளவு விசாரணைகளுக்கு பின், இச்சம்பவத்தில் பிற ஜாதியினர் ஈடுபடவில்லை என்று தெரிந்த பின்னரே, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கி, மூன்று நபர்கள் மீது கடந்த ஜனவரியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.அதன்பின், இயல்பான நிலையில் அவ்வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.நிலைமை இவ்வாறு இருக்க, வேங்கைவயல் விவகாரத்தில் நீதி விசாரணை தேவை; சி.பி.ஐ., விசாரணை தேவை என்று, அனைத்து அரசியல் கட்சிகளும் கூக்குரல் எழுப்புகின்றன!பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீது, மாற்று இனத்தவர்கள் வன்கொடுமை செய்திருந்தால் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தும்; அதற்காக உள்ள தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படும். அவ்வாறு இல்லாத போது, சம்பந்தபட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்படுவது தான் நடைமுறை.இது, முன்னாள் அமைச்சரும், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை உறுப்பினர், வழக்கறிஞர் என்று பன்முகம் கொண்ட செம்மலைக்கு தெரியாதா?

நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும்!

சு.ராமலிங்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தலைமை செயலகத்தில் செயல்படும் முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு மையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒரு புகார் கொடுத்து, ஒப்புதல் நகலை பெற்று உரிய அலுவலகத்தில் கொடுத்தால், 15 நாட்களுக்குள் தீர்வு கிடைத்து விடும்.ஆனால், இன்றோ அவ்வாறு நடப்பதில்லை.வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம், 1 லட்சத்து, 75,000 வாங்கி, ஒருவர் ஏமாற்றி விட்டார். காவல் துறை சென்னை ஆணையர், துணை ஆணையர், இயக்குநர் என பலரிடம் உரிய ஆவணங்களோடு புகார் அளித்தும் பலனில்லை. இதில், மயிலாப்பூர் துணை ஆணையர் ராஜத் சதுார்வதி ஒருவர் தான், நான் அளித்த புகாரை முழுதுமாக படித்தவர்; அத்துடன் செயலிலும் இறங்கினார். என் துரதிர்ஷ்டம், அவர் பணிமாறுதலில் கள்ளக்குறிச்சி சென்று விட்டார். அதன்பின் எந்தவித நடவடிக்கையும் இல்லை; இரண்டு ஆண்டுகள் கடந்தன. முதல்வர் மக்கள் குறைதீர் மையத்தில் 2024 செப்.,ல் புகார் அளித்தேன்; டிசம்பர் வரை பதில் இல்லை. மையத்திற்கு போன் செய்து கேட்டால், புகாரை உதவி ஆணையருக்கு அனுப்பி விட்டதாக சொன்னார்கள்.உதவி ஆணையருக்கு போன் செய்தால் புகாரை முடித்து வைத்துவிட்டதாக கடிதம் வந்திருப்பதாக கூறினார். ஆனால், யார் முடித்து வைத்தனர் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்!அரசு துறைகள் எப்படி இயங்குகின்றன என்பதற்கு, இது ஓர் உதாரணம். தமிழக அரசு, மக்கள் பிரச்னைகளை தீர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு துறைகள் ஆரம்பித்தால் மட்டும் போதாது; அதன் செயல்பாடுகளை கவனித்து, கருப்பு ஆடுகளை களையெடுத்து, பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்!ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், குறைதீர் மையத்தின் செயல்பாடுக்கு, என் அனுபவம் ஒன்றே போதும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
பிப் 25, 2025 00:11

எனக்கும் என் தந்தைக்கும் தமிழே தாளம். பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை யென்று சொன்னதால் சரியாக கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டோம். என்ன முயன்றாலும் எங்களுக்கு ஹிந்தி கற்க வராது. எங்களுக்கு வராத ஹிந்தியை மற்றவர்கள் படித்து முன்னேற விடமாட்டோம்.


sankaranarayanan
பிப் 24, 2025 18:17

மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது என்கிறார் உதயநிதி. அதற்கு அவர் சொல்லும் காரணம், ஹிந்தி படித்தால் தமிழ் மழுங்கிவிடுமாம் இவரது பேச்சை விட்டுத்தள்ளுங்கள் படித்தவர்கள் பேசினால் அதில் அர்த்தம் இருக்கும் இதற்குமேல் சொல்ல முடியாது லட்சுமணசாமி முதலியார் ராமசாமி முதலியார் சி.சுப்ரமண்யம் இவர்கள் கல்விக்காக செய்த அருந்தொண்டை யாராவது இப்போது உள்ள அரசுடன் ஓப்பிட்டு பார்க்க முடியுமா அப்போது படித்தவர்கள் மேதைகளானார்கள் இப்போது அது தலை கிழாகவே மாறிவிட்டது


Sridhar
பிப் 24, 2025 13:09

மும்மொழி கொள்கையை திருட்டு கும்பல் என்ன வேணும்னேவா எதிர்க்குது? அவுங்க பிஸ்னஸ் பாதிக்கப்படாதுங்கறதுக்கு ஒரு உத்தரவாதமும் இல்லாத போது எப்படீங்க? அவுங்களே அவுங்க தலையில மண்ண வாரி போட்டுக்கணும்னு எதிர்பாக்கறீங்களா? நாளைக்கே சினிமா விநியோகம் எல்லாம் அரசே ஏற்று நடத்தும்னு ஒரு கொள்கை வருதுன்னு வச்சுக்கோங்க. அவுங்களால சும்மா இருக்கமுடியுமா? கலைத்துறையிலும் சங்கிகள் அராஜகம்னு எப்படி பொத்துட்டு வரும்? அதுபோலத்தான். பிஸ்னஸ் மற்றும் சுருட்டல் ரொம்ப முக்கியம்ங்க. அது தெரியாம எல்லாரும் அவுங்களுக்கு விசயம் புரியலையோன்னு நினச்சு விளக்கம் கொடுத்திட்டு இருக்காங்க.


Barakat Ali
பிப் 24, 2025 11:03

மயிலாடுதுறை சாந்தியம்மா .... வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளியை / குற்றவாளிகளை அடையாளம் காண சுமார் இரண்டரை ஆண்டுக்காலம் ஏன் தேவைப்பட்டது ???? நிலைமையைச் சமாளிக்க வன்கொடுமைச்சட்டத்தில் வழக்குப்பதியப்பட்டது என்கிறீர்கள் .... உங்களுக்கே நகைப்பாக இல்லையா ???? பொறுப்பான ஒரு அரசிடம் இருந்து நியாயமான விசாரணை / நடவடிக்கையை எதிர்பார்ப்பீர்களா அல்லது அப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்கும் நவடிக்கையை எதிர்பார்ப்பீர்களா ???? இப்பொழுதும் கூட நிலைமையைச் சமாளிக்கத்தான் இந்த நடவடிக்கை ..... நியாயமான விசாரணை நடந்துள்ளது என்றால் இப்படி பல காலம் அலட்சியமாக இருந்துவிட்டு திடீரென குற்றவாளிகள் ஆடியோ ஆதாரங்களுடன் பிடிபடுவார்களா ???? வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குது என்று சொல்லுங்கள் .... ஆனால் ஏமாளிகளிடம் சொல்லுங்கள் ....


Barakat Ali
பிப் 24, 2025 10:57

சார் .... சார் ... சென்னை ராமலிங்கம் சார் .... வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம், 1 லட்சத்து, 75,000 வாங்கி, ஒருவர் ஏமாற்றி விட்டார் என்று சொல்கிறீர், நீங்கள் பணம் கொடுத்தது சட்டபூர்வமான செயலா ????


Barakat Ali
பிப் 24, 2025 10:53

என்னது ???? ஹிந்தியால் தமிழ் அழிந்துவிடுமா ??? ஏன் இந்த முதலைக்கண்ணீர் ???? தமிழுக்கும் வந்தேறி திராவிடர்களுக்கும் என்ன சம்பந்தம் ???? தமிழை சனியன் என்றும் ஏசி இருக்கிறார் ஈவேரா .... “நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிற்றோம். சமயத்தை, சமயநூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே சரி, இதற்கு மேலும் தமிழுக்கு என்ன வேண்டும் ????” என்றும் கேட்கிறார் ஈ.வெ.ரா.


Dhandapani
பிப் 24, 2025 06:57

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது ஏதுமில்லை என்றுதான் பாரதி சொன்னான், பாரதி பழமொழிகள் கற்றதால் தான் மற்றமொழில்களைவிட தமிழ் இனிமையாக தெரிந்துள்ளது. காலம் மாறிவிட்டது, உங்களைப்போன்ற சுயநல அரசியல்வாதிகள் ஹிந்தி ஒன்றைவைத்தே காலம் ஒட்டுகிறீர்கள், ஹிந்திக்காரன் பூராம் வந்து இங்கு தெரிவுக்கு பானிபூரி விக்கிறான், நம் தமிழன் ஹிந்தி தெரியாமல் அங்கே செல்லமுடியவில்லை


D.Ambujavalli
பிப் 24, 2025 06:32

மாணவர்கள், பெற்றோர் சம்பந்தப்பட்ட பிரசனைக்கு பெற்றோர் சங்க பிரநிதிகளின் அபிப்பிராயம், maanavarkal டம் அபிப்பிராயம் கேட்காமல் இவர்கள் தங்கள் செய்வதே சரி என்று தங்கள் கொள்கையைத் தான் திணிக்கிறார்கள்


நிக்கோல்தாம்சன்
பிப் 24, 2025 05:45

உதயநிதி பள்ளி கல்லூரி செல்லுவதற்கு வசதி வாய்ப்பிருந்தும் அந்த நாட்களில் என்ன செய்தான் என்பதனை பலரும் அறிந்துள்ளோம் , அவன் இப்போது தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் நிலையில் இருப்பது தான் தமிழர்களின் துரதிருஷ்டம்