எஸ்.ராமசுப்ரமணிய கனபாடிகள், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பேட்டிஅளித்துள்ள பா.ஜ., துணைத்தலைவர்நாராயணன் திருப்பதி, 'மகாவிஷ்ணு வழக்கு, ஐகோர்ட்டுக்கு செல்லும் போது, தமிழக அரசு குட்டுப்படுவது நிச்சயம்' என்றும், 'மகாவிஷ்ணு பேசுவதற்கு, பள்ளிக்கல்வித்துறை தான் அழைப்பு விடுத்துள்ளது. அவரை வைத்து எழுந்துள்ள சர்ச்சை முழுவதற்கும், அமைச்சர் மகேஷ் தான் பொறுப்பேற்க வேண்டும். 'மேலும், இந்த விஷயத்தில் தவறு நடந்துள்ளது என, அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால், தவறுக்கு பொறுப்பேற்று, அவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதை விடுத்து, ஆசிரியர்களை மாற்றம் செய்து, மகாவிஷ்ணுவை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.'திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் துக்ளக் ஆட்சி நடத்துகின்றனர். எப்படியும் இந்த வழக்கு ஐகோர்ட்டுக்கு செல்லும். ஏற்கனவே பல வழக்குகளில், ஐகோர்ட்டில்தமிழக அரசு குட்டு பட்டிருக்கிறது. மகாவிஷ்ணு மீதான வழக்கிலும் தமிழக அரசு, மிகக் காட்டமான விமர்சனங்களை ஐகோர்ட் வாயிலாக எதிர்கொள்ளும்' என்றும், நாட்டின் நிலைமை புரியாமல் உளறி இருக்கிறார்.நாராயணன், ஒரு மூத்த அரசியல்வாதி. அவர் வாயிலிருந்து இப்படியான சொற்கள்வந்திருப்பது ஆச்சரியம் தான். ஏனெனில்,'குண்டர்' சட்டம் பாய வேண்டிய கண்டனப் பேச்சு இது!நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் அரசு. இன்னும் சற்று விளக்கமாக, விரிவாக சொல்ல வேண்டுமானால், சிறுபான்மையினத்தவரை பாதுகாக்கும் அரசு; அவர்களுக்காகவே இயங்கும் அரசு.அந்த இன மக்களுக்கோ, மதத்திற்கோ எதிராக யார் எந்த மூலையில் இருந்து என்ன பேசினாலும், அவர் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் விடாது.'நாங்கள் மதம் மாற்றுவதாக, ஆர்.எஸ்.எஸ்.,காரன் சொல்றான். நாங்கள் மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் கோவில் ரிக்கார்டுகளை எடுத்து பாருங்கள்.எவ்வளவு பேர் ஹிந்து மதத்தில் இருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மாறி உள்ளனர்என்பது தெரியும். அதற்கான பட்டியலை நாங்கள் தருகிறோம்' என, கன்னியாகுமரிமாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி வீதி உலா வந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே, பிரதமர் மோடி குறித்து, 'புனிதமாக' பேசி, கைதாகி, ஜாமினில் வெளியே வந்திருக்கும் இவரல்லவோஉத்தமர்!இப்படியெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, கர்மாவை குறித்து பேசினால், கைதாவதைத் தவிர வேறு வழியில்லை.இரண்யன் நாட்டில் வாழ்ந்தால்,'இரண்யாய நமஹ' என்று சொல்ல வேண்டும் என்பது புராணம் நமக்கு கற்றுத் தந்திருக்கும் பாடம்.அதுபோல, திராவிட மாடல் ஆட்சி நடக்கும் போது, 'திராவிடாய நமஹ' என்று சொல்ல வேண்டும். அதுவும், அன்றாடம் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டுமே உயிரோடு உருப்படியாக உலா வர முடியும்!எனவே, திருப்பதி அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள்; புரியாமல் அரசியல் பேசா தீர்; அப்படியே பேச நேர்ந்தால், 'திராவிடாய நமஹ'வை மட்டும் சொல்லுங்கள்! கல்வி க் கு முக்கியத்துவம் கொடுங்களேன்!
சொ.பீமன்,
அல்லம்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: நாடு
சுதந்திரம் அடைந்து, 78ஆண்டுகள் ஆன நிலையில்,மக்களை ஜாதி வாரியாக பிரித்து,
கல்வி யிலும், அரசு வேலைகளிலும் சலுகைகள் காட்டுவதற்காக இட ஒதுக்கீடு
சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் குறிப்பிட்ட காலத்துக்கு
மட்டுமே தொடர வேண்டும் என்றும், பின் தங்கிய ஜாதியினர் முன்னேறிய பின்,
சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே, சட்டம் இயற்றியவர் களின் நோக்கம். இதன்படி,
ஆண்டுதோறும் பயனடைந்த ஜாதிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அது குறித்த
அறிக்கையை அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு வெளியிடப்படாததால்,
ஒவ்வொரு ஜாதி தலைவரும், உள்ஒதுக்கீடு வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு
வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்த்து வருகின்றனர். ஜாதிவாரி
கணக்கெடுப்பு,எந்த ஜாதி பெரியது, எது சிறியது என்று பாகுபாடுபடுத்தி,
ஜாதிக் கலவரங்களைத் துாண்டத் தான் பயன்படுமே தவிர,ஒற்றுமைக்கு
வழிவகுக்காது.தமிழகத்தில் மொத்தம்,442 ஜாதிகள்
கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து ஜாதியினரும் திருப்தி அடையும்
வகையில்,உள்ஒதுக்கீடுகள் வழங்குவது, சாத்தியமே இல்லை. தற்போது, 69 சதவீத
இடஒதுக்கீடுகள் உள்ளன.வகுப்பு ஜாதிகள் எண்ணிக்கை இடஒதுக்கீடு சதவீதம்பிற்படுத்தப்பட்டோர் 136 26.5முஸ்லிம்கள் 7 3.5மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 108 20பட்டியலினத்தவர் 76 15அருந்ததியர் - 3பழங்குடியினர் 36 1பொதுப்பிரிவு 79 -மொத்தம் 442 69இதில் பெண்களுக்கு, 30 சதவீதம்.தமிழகத்தில்,
69 சதவீதம் இட ஒதுக்கீடுஎன்பது, பாராட்டப்பட வேண்டிய கொள்கை முடிவு.
ஆனால், தற்போதுவலியுறுத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் உள்
இடஒதுக்கீட்டை, அனைத்து ஜாதியினருக்கும் பகிர்ந்தளிப்பது சாத்தியமில்லை. அரசியல்
செல்வாக்குள்ள தலைவர்கள் தங்கள்ஜாதிக்கு அதிக இடஒதுக்கீடு பெற்றுக்
கொள்ளவாய்ப்புள்ளது. இது, அப்பாவி பூனைகளை ஏமாற்றி, அப்பத்தை குரங்கு
பங்கு போட்டு தின்ற கதை போல் ஆகி விடும்.ஜாதி என்பது இழிவானதுஅல்ல
என்பதற்காக,மதுராந்தகம் அருகில்,1859ல் பிறந்த, ராவ் பகதுார்இரட்டை மலை
சீனிவாசன், தன் பெயருக்கு பின்னால், பறையர் என்று சேர்த்துக் கொண்டார். தீண்டாமை
தலைவிரித்தாடியபோது, அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளிகளை வைத்தே,
பிரிட்டிஷ் அரசுக்கு பல கோரிக்கைகள் வைத்தவர். காந்திஜி,
அம்பேத்கர்போன்றவர்களுடன் லண்டன் வட்டமேஜை மாநாட்டில்பங்கு
பெற்றவர்.பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மாகாண அரசுகளில் பட்டியலின மக்களுக்கு
பிரதிநிதித்துவம் அளிக்க பாடுபட்டவர். அவர், சென்னை மாகாணத்தில்,
பனகல் ஆட்சியில் சட்டசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிதிராவிடர்களுக்கு பஞ்சமி நிலம் ஒதுக்குவதற்கு பாடுபட்டவர். கல்வியால்
உயர்ந்தால் மட்டுமே சமத்துவ சமுதாயம் என்ற கொள்கையை எட்ட முடியும் என்ற
கருத்தை வலியுறுத்தி,தாமும் கல்வியில் உயர்ந்து ஆதி திராவிடர்களில் முதல்
பட்டதாரி என்ற பெருமையை பெற்றவர். அவர் செய்த சாதனைகளுக்கு, உரிய
அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே வருத்தம்.எனவே தலைவர்கள்
இடஒதுக்கீட்டை குறித்து கவலைப்படாமல் தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம்
அளித்து, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அனைவரும் தமிழர்கள் என்ற
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம்!