உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சென்னீர்குப்பத்தில் குப்பை குவிப்பு அபராதத்தை மதிக்காமல் அட்டூழியம்

சென்னீர்குப்பத்தில் குப்பை குவிப்பு அபராதத்தை மதிக்காமல் அட்டூழியம்

பூந்தமல்லி,குப்பை கொட்டுவதற்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும், சென்னீர்குப்பத்தில் அறிவிப்பு பலகையின் கீழேயும் குப்பை கொட்டி, அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை, பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து வேலப்பன்சாவடி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்னீர்குப்பம் பகுதியில், சாலையோரம் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. அங்கு அரசு கருவூலம்,தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள நிலையில், குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில், குப்பை கொட்டக்கூடாது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'குப்பை கொட்ட தடை செய்யப்பட்ட பகுதி. மீறி கொட்டினால் 5,000 ரூபாய் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.இதைப் பார்த்தும் அச்சமில்லாமல் பலர், இந்த அறிவிப்பு பலகை கீழேயும் குப்பையை கொட்டி வருகின்றனர். அறிவிப்புடன் மட்டும் நிறுத்தாமல், குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதித்தால் மட்டுமே, இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை