உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மகனுக்கு வெண்ணெய் மக்களுக்கு சுண்ணாம்பு!

மகனுக்கு வெண்ணெய் மக்களுக்கு சுண்ணாம்பு!

என்.ஸ்ரீதர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.எல்.ஏ.,வாக பதவிஏற்கும்போதும், அதே பதவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும், விளையாட்டுத் துறை அமைச்சராக கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றபோதும், பிரதமர்விழா உட்பட எந்த அரசு விழாவில் பங்கேற்கும்போதும், சமீபத்தில் துணை முதல்வராக பதவி ஏற்றபோதும், ஒரே சட்டை தான் உதயநிதிக்கு; அதாவது, தி.மு.க., இளைஞரணி சின்னம் பொறித்த டி ஷர்ட்.ஒருவர், என்ன உடை உடுத்த வேண்டும்என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அமைச்சராக அரசியலமைப்பின்படி பதவி வகிக்கும் ஒருவர், இவ்வாறுகட்சி சார்ந்த அடையாளத்தை தாங்கி வெளிப்படையாக, அதுவும் சட்டசபைமற்றும் அரசு விழாக்களில் உடை அணிந்துவருவது, அவர் வகிக்கும் பதவியின் மாண்பை மற்றும் கண்ணியத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்பதில், இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை.தமிழக சட்டசபை வரலாற்றில், இதுமாதிரி ஒரு செயலை, ஒரு அமைச்சரோ அல்லது ஒரு உறுப்பினரோ செய்திருப்பார் என்ற நிலை இருந்ததாக தெரியவில்லை. இவர் வகிக்கும் பதவி, பொதுவாக தமிழக மக்களுக்கு என்று இல்லாமல், இவர் ஒரு கட்சியினருக்கு மட்டும் தானா என்று எண்ணத் தோன்றுகிறது.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று சொற்கள் உள்ளன. அது, தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரை சொன்னது.அந்த வார்த்தைக்கு அர்த்தம் ஏதும் உதயநிதிக்குத் தெரியுமோ என்ற சந்தேகம் எழுகிறது.அக்., 2ல் காந்தி ஜெயந்தி அன்று, கதர் சட்டை அணிய உறுதி பூணுமாறு, முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு அறிவுரை கூறினார்; அது தன் மகனுக்கு மட்டும் கிடையவே கிடையாது போலிருக்கிறது!மகனுக்கு வெண்ணெய், மக்களுக்கு சுண்ணாம்பு!

கவனத்தில் கொள்வாரா முதல்வர்?

---ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர் ஸ்டாலினின்வெளிநாட்டு சுற்றுப் பயணம்வாயிலாக, தமிழகத்தில்கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் வருகின்றன எனச் சொன்னது பாராட்டுக்குஉரியது.அதே நேரம், இத்தகையபுதிய தொழில் முதலீடுகள்,சென்னையிலும், அதை ஒட்டிய பகுதிகளான மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பெருநகரங்களில்மட்டுமே செய்யப்படஉள்ளன என்பது சரியல்ல.மேற்கண்ட நகரங்களில்,தொழில் துறை ஏற்கனவேநல்ல வளர்ச்சி பெற்றுள்ளநிலையில், தொடர்ந்து பெருநகரங்களை மட்டுமே தேர்வுசெய்ய, அரசு முனைப்பு காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.பின்தங்கிய மாவட்டமானராமநாதபுரத்தை, முதல்வர் மறந்தது ஏன்? ராமநாதபுரத்தில் இருந்துதுாத்துக்குடி நவீன துறைமுகம் செல்லும் துாரம், 110 கி.மீ., மட்டுமே. ஏற்றுமதி - இறக்குமதிக்கு இலகுவான பாதை. ராமநாதபுரத்தில் இருந்துமதுரை அவனியாபுரம் விமான நிலையம், 120 கி.மீ.,துாரம் மட்டுமே.பின்தங்கிய ராமநாதபுரம், முதுகுளத்துார், கடலாடி போன்ற தாலுகாக்களில் எண்ணற்ற, படித்த மனிதவளங்கள் உள்ளன.இவர்களில் பலர், வெளிநாடுகளில் தங்கள் கற்ற கல்விக்கு சம்பந்தமில்லாத வேலைகளில், குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்து, பல ஆண்டுகளாககாத்துக்கிடக்கும் அவல நிலையும் உள்ளது. தமிழக முதல்வர் இதை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், பின் தங்கிய மாவட்டமானராமநாதபுரத்துக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். இதன் வாயிலாக,பெருநகரங்களில் ஏற்படும்மக்கள் நெருக்கடியை தவிர்க்கவும் முடியும். 

ஈ.வெ.ரா .,வுக்கு மிகப்பெரிய நன்றி!

சா.பா.குமார், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ-மெயில்'கடிதம்: அந்தக் காலத்தில், கிராமங்களில் வசித்தோம்; வேதம் மட்டும் பயின்றோம்;அக்ரஹாரங்களை விட்டு வெளியே வரவில்லை. பின், நிலபுலன்கள்அனைத்தையும் கொஞ்சம்கொஞ்சமாக விற்று, நகரத்தை நோக்கிப்பயணித்தோம்.முக்கிய நகரங்களில் குடியேறி, மெக்காலே கல்வி முறையில், பள்ளி இறுதிப்படிப்பு முடித்து, தட்டெழுத்து - குறுக்கெழுத்து பயின்று, ஆங்கிலேயருக்கு பணி செய்தோம்; இரண்டு மொழிகள் கற்றுத் தேர்ந்தோம்.சுதந்திரம் வந்தது; தனியார் மற்றும் அரசு வேலைகளில் தானாகவே அமர்ந்தோம். சுதந்திர இந்தியாவில், அம்பேத்கர் பரிந்துரையில்ஒதுக்கீடு வந்தது; எங்களுக்கு வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டது.தட்டெழுத்து, கணினி மயமாக்கப்பட்டதும் அதைக் கற்று, வெளிநாடுசென்றோம்; குறிப்பாக அமெரிக்காவுக்கு! சொந்த வீடு வாங்கி, செட்டில் ஆனோம்; மூன்றாவது தலைமுறை அங்கே தொடர்கிறது.கூகுள் பிச்சை, மாநில கவர்னர், உச்ச நீதிமன்ற நீதிபதி, துணை அதிபர்,தற்போது அதிபர் வேட்பாளர் என, உச்சம் தொட்டாயிற்று.'நாசா'வில் பொறியாளர்கள்,பெரிய மருத்துவமனைகளில், 'ஆன்காலஜி' போன்றகேன்ஸர் சிகிச்சை மருத்துவர்கள் என, அமெரிக்காவில் கொடி நாட்டியாயிற்று. எங்கு சென்றாலும், அறிவை மட்டுமே பயன்படுத்துவதால், துர்குணத்தை நீக்கி வாழ்வதால் சிறப்பு.துவேஷம் செய்த ஈ.வெ.ரா.,வுக்கு மிகப்பெரிய நன்றி!

கிராம வா ழ்க்கையை சீர்குலைக்காதீர்!

பொ.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சமீப காலமாக தமிழக அரசு, நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்றுவது, பின், நகராட்சியை பெருநகராட்சிஎன்ற பெயரில், அதை சுற்றி இருக்கும் கிராமங்களை இணைப்பது என்ற ரீதியில் செயல்படுகிறது; இவை அனைத்துமே, வரி வசூலை அதிகரிக்க மட்டுமே என்று எல்லாருக்கும் தெரியும். இப்படியே போனால், இன்னும் 10 ஆண்டுகளுக்குள், கிராமம் என்ற கட்டமைப்பே நம் தமிழகத்தில் இருக்காது. கிராமங்களுக்கென அரசு வழங்கும் பல சலுகைகளும் காணாமல் போகும். தற்போது, 100 நாள் வேலைத் திட்டம் உட்பட கிராம மக்கள் பலன் பெறும் திட்டங்கள்வழக்கொழிந்தால், வேலை ஏதும் அறியாத மக்கள்,திடீரென சாப்பாட்டுக்கேதிண்டாடும் நிலை ஏற்படும்.ஒரு கிராமத்தை நகராட்சிஉடன் இணைப்பதால், அந்த கிராமத்துக்கு என்ன நன்மை கிடைத்து விடப்போகிறது? வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி வசூல் அதிகரிக்கும்; அவ்வளவு தான்!பல இலவச திட்டங்களுக்கு, நிதி அதிகப்படியாக தேவை தான்; அதை வேறு வழியில் திரட்டுங்கள்;அதை விடுத்து கிராமங்களைகுறிவைத்து அவற்றின் மீது தாக்குதல் நடத்தாதீர்கள்.பஞ்சாயத்து தலைவர்,பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்கள் என்ற சிறு கட்டமைப்புகள், மக்களுக்கு தேவையானதைநிறைவேற்றித் தருகின்றன.சிரமமில்லாத இந்தகிராம வாழ்க்கையை சீர்குலைக்காதீர்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Senthil
அக் 07, 2024 15:38

பிரதமர் போல் தான் செல்லும் மாநிலங்களுக்கு ஏற்றாற் போல் உடை அணிந்து அவரைப் போலவே மக்கள் காதில் பூ சுற்றும் வேலையை கற்க உதயநிதி கற்க வேண்டும். இந்த வெண்ணெய் சுண்ணாம்பு டயலாக் முதலில் உங்கள் நிதி அமைச்சரிடம் சென்று முதலில் கூறுங்கள்.


Sam Dev
அக் 07, 2024 09:34

குமரே. மொத்தத்துல எல்லோருக்கும் மோடியின் பக்கோடாதான்.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 20:13

மகனுக்கு வெண்ணெய் மக்களுக்கு சுண்ணாம்பு சமூக நீதி இதுதான் ........ எல்லோரும் போயி பிள்ளைகுட்டிகளை படிக்க வையுங்க .......


D.Ambujavalli
அக் 06, 2024 19:10

‘துண்டுச்சீட்டு’ கலாசாரமும், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி பணி நியமனமும் மட்டுமே நம் சாதனைகளாக நிற்கையில், நல்லவேளையாக இதே சில லட்சங்களை படிப்புக்கு செலவிட்டு, திறமையாக உழைத்து, வெளி நாட்டை உயர்த்தி நம் நாட்டு கல்வியறிவை ‘ஏற்றுமதி’ செய்த அரசியல்வாதிகள் ஒரு நல்ல, அறிவும், திறமையும் உள்ள தலைமுறைகளை இல்லாமல் செய்த ‘புண்ணியவான்களாவர்’


R.MURALIKRISHNAN
அக் 06, 2024 13:47

அந்த சுண்ணாம்பிலும் 40%கமிஸன் வாங்கும் திராவிட மாடல்


Subash BV
அக் 06, 2024 12:07

Dynasties politics will be like this only. HINDUS BE ALERT.


raja
அக் 06, 2024 08:46

ஒருத்தன் துண்டு சீட்ட பார்தும் கூட படிக்க தெரியாத தத்தி.. அவன் வாரிசு ஒரு கிரிப்டோ தத்தி அப்புறம் எப்படி இருக்கும் விடியாத ஆட்சி...


Karthikeyan
அக் 06, 2024 08:35

ரெம்ப நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விசயத்தை தினமலர் வழியாக கூறிய ஸிரிதர் அவர்களுக்கு நன்றி... பொதுவாக அரசுப் பணிகளில் இருப்போர் டி சர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என்ற விதி உள்ளது... தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய துணை முதல்வர்... இப்படி கட்சி அடையாளமிட்ட டி சர்ட் அணிந்து வரலாமா? அறிவுரைகளெல்லாம் மக்களுக்குத்தானா? தன் மக்களுக்கு கிடையாதா? இதனை சரி செய்வது முதல்வரின் கடமை... அதுமட்டுமல்ல...இதனை தமிழக மக்களும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது...


kantharvan
நவ 02, 2024 10:04

அதே மாதிரி ரொம்ப நாளா என் மனசிலேயும் அரித்து கொண்டே இருக்கின்ற கேள்விதான் இது ? திரு யோகி ஆதித்யநாத் அவர்கள் அணியும் ஆடை பற்றி பேசலாமா? அரசியல் அமைப்பின் படி முதல்வர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் ஆனால் இவரின் பேச்சுகளும் செய்கைகளும் எப்போதும் ஒரு மதத்தினருக்கு எதிரானதாகவே இருக்கிறதே? யாரவது கேள்வி கேட்பீர்களா? உதயநிதி என்றவுடன் அழகாக கிளம்பி விட்டர்கள் நியாயம் பற்றி பேச? யோகியை கேள்வி கேட்காத உங்கள் யாருக்கும் உதய நிதியை கேள்வி கேட்க தார்மீக உரிமையே இல்லை.


Sundaram Muthiah
அக் 06, 2024 07:14

டேய் நீ யாருன்னு தெரியுது . நீ சார்ந்த கொள்கைக்கு சொம்புக்கு தூக்குற பாஸ் .


மோகனசுந்தரம்
அக் 06, 2024 06:35

சா.பா. குமார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 08:10

அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற வகுப்பினரும் இருக்கிறார்கள் ...... தமிழர்களை விட தெலுங்கர்கள் அதிகம் ....... சந்திரபாபு நாயுடு முன்பு முதலமைச்சராக இருந்த பொழுது நிறைய செய்துள்ளார் .....


sankar
அக் 06, 2024 19:32

நாங்களும் இருக்கிறோம் என்றுதானே அவர் சொன்னார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை