உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பொதுவுடைமை ஆக்குங்கள்!

பொதுவுடைமை ஆக்குங்கள்!

கே.மணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஈ.வெ.ரா.,வின் பெண்ணிய சிந்தனையின் வீரியம், இவ்வளவு நாட்களாக பொதுமேடைக்கு வர தயங்கிக் கொண்டிருந்தது என்பதை விட, அதை நாகரிகமான மனிதர்கள் பேச தயங்கினர் என்பதே நிதர்சனம்!அந்த நாகரிக பூட்டை உடைத்து, ஈ.வெ.ரா.,வின் புடைநாற்றமடைந்த சிந்தனைகளை வீதிக்கு கொண்டு வந்து விட்டார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். திராவிட கட்சிகளின், 70 ஆண்டுகால பித்தலாட்டம், இன்று சமூக வீதியில் தோல் உரிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. எந்த வாயை வைத்து, ஈ.வெ.ரா., தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் எதிராக தமிழகத்திலேயே வடை சுட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தாரோ அந்த வடையின் ஊசல் நாற்றம், இன்று தமிழகத்தின் மூலைமுடுக்கு எல்லாம் நாறிக் கொண்டிருக்கிறது. ஈ.வெ.ரா., இல்லையென்றால், பெண்கள் படித்திருக்க முடியுமா, கல்வி கற்றிருக்க முடியுமா, கோவில்களுக்குள் தலித்துகள் நுழைந்திருக்க முடியுமா என்று ஏகப்பட்ட முடியுமாக்களைப் போட்டு, கதை கட்டி வந்த கூட்டத்திற்கு, சீமானைப் போன்றவர்கள் எதிர்க்கேள்வி கேட்பதை தாங்க முடியவில்லை!கொடி பிடித்து புறப்பட்டு விட்டனர்!சீமான் என்ன தவறாக கூறி விட்டார்...'கணவன் ஒழுக்கம் தவறினால், மனைவியும் தனக்கு பிடித்த ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளலாம்' என்று பச்சையாக கூறியவர் தானே ஈ.வெ.ரா., உலகத்தில் ஒரு ஒழுக்கத் தவறை, உயர்த்திப் பிடித்து, அதை பெண்ணியம் என்று பெயரிட்ட மேதை அல்லவா ஈ.வெ.ரா., அவர் சமூக நீதிக்கு போராடினார், பெண்ணுரிமைக்காக கொடி பிடித்தார், ஆலய புரட்சி செய்தார் என்றால், அவர் அக்காலத்தில் பேசிய பேச்சுகளையும், ஒலிநாடாக்களையும், அவரது புத்தகங்களையும் பொதுவுடைமை ஆக்க வேண்டியது தானே... ஏன் திராவிட கழகத்தினர் பூதம் புதையலைக் காப்பது போல், காத்துக் கொண்டிருக்கின்றனர்?சந்தைக்கு வந்தால் தானே தெரியும்... அது நல்ல கத்தரிக்காயா, சொத்த கத்தரிக்காயா என்று!அதனால், முதலில், ஈ.வெ.ரா.,வின் புத்தகங்களை பொதுவுடைமை ஆக்குங்கள்... பின், அவர் செய்த சமூக புரட்சி குறித்து மக்கள் பேசட்டும்!

பெருமைக்கு அளவில்லை!

எம்.வேல்வேந்தன், கன்னியாகுமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்த மூன்று ஆண்டுகளில், 12,000 கோப்புகளில், கையெழுத்து போட்டுள்ளேன்' என தனக்குத் தானே தற்பெருமை பேசி, பெருமிதம் கொண்டுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின். படிப்பறிவும், பகுத்தறிவும் இல்லாத பாமர மக்களுக்கு வேண்டுமானால், அவரது தற்புகழ்ச்சி பிரமிப்பாக தோன்றலாம்.ஆனால், அரசு அலுவலகங்களில் -குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையில் தேசிய சேமிப்பு பத்திரங்கள் விற்பனை பிரிவில் பணிபுரிவோர், மூன்று ஆண்டுகளில், 2 லட்சம் கையெழுத்துகளுக்கு மேல் போட்டிருப்பர். சட்டசபை ஆண்டுக்கு, 40 நாட்கள் கூடி இருக்குமா என்பதே சந்தேகம் தான்...அப்படியே, 40 நாட்கள் என்று வைத்துக் கொண்டாலும், மூன்று ஆண்டுகளில், 120 நாட்கள் சட்டசபை கூடியிருக்கும். முதல்வர் கையெழுத்திட்டதாக பெருமைப்பட்டு கொண்டிருக்கும், 12,000 கையெழுத்துக்களை, 120 ஆல் வகுத்தால், ஒரு நாளைக்கு, 100 கையெழுத்துக்கள் போட்டுள்ளார். ஒரு நாளைக்கு, 100 கையெழுத்துக்கள் போடுவது ஒன்றும் கின்னஸ் சாதனையோ, லிம்கா புக் ஆப் ரிகார்ட் சாதனையோ அல்ல; சர்வ சாதாரணமான ஒன்றுதான்.ஒரு சாதாரண அஞ்சல் அலுவலகத்தில், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்ற பல வகையான சேமிப்பு பத்திரங்கள் 100, 500, 1,000, 5,000, 10,000 வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு அஞ்சல் துறை சூப்பர்வைசர், ஆண்டொன்றுக்கு ஞாயிற்றுக் கிழமை, பண்டிகை விடுமுறை, தற்செயல் விடுப்பு என, அனைத்து விடுமுறை நாட்கள் நீங்கலாக, 200 நாட்கள் பணிபுரிகிறார். இந்த விற்பனை பத்திரங்கள் சராசரியாக நாளொன்றுக்கு மினிமம், 100லிருந்து 400 வரை விற்பனை ஆகும். தோராயமாக, 200 என்றே வைத்துக் கொண்டாலும், நாளொன்றுக்கு, 200 வீதம் 200 நாட்களுக்கு, 40,000 கையெழுத்து போடுவார். மூன்று ஆண்டு களுக்கு, ஒரு லட்சத்து, 20,000 கையெழுத்துக்கள் போட்டு இருப்பார்.அதற்காக எந்த அஞ்சலக சூப்பர்வைசரும், 'நான் ஆண்டுக்கு, 40,000 கையெழுத்துக்கள் போட்டிருக்கிறேன்' என்று பெருமைப்படுவது இல்லை!ஆனால், முதல்வரோ, மூன்று ஆண்டுகளில், 12,000 கோப்புகளில் கையெழுத்து போட்டதாக, சட்டசபை பதிவேட்டில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன், தமிழக முன்னாள் முதல்வர்கள் யாராவது இது போல, தாங்கள் போட்ட கையெழுத்துக்களை கணக்கு வைத்து, பெருமை பீற்றியதாக நினைவு இல்லை! திராவிட மாடல் ஆட்சியில் எதற்கெல்லாம் பெருமைப்படுவது என்ற வரன்முறையே இல்லை!

பழங்குடியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: ------------நம் நாட்டின் பரப்பளவில், 22 சதவீதம் தான் காடுகள் உள்ளன. மலைகள் நிறைந்த எட்டு மாநிலங்களின் வன வளம் இன்று கவலைக்குரியதாக உள்ளது. இந்நிலையில், காடுகளின் வளத்தைக் காப்பாற்ற, வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்; ஆனால், அவர்களுக்கு ஊதியம் குறைவு. அவுட்சோர்ஸ் நியமனம் என்பதால், பணி நிரந்தரம் இல்லை; உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில், 1,500 வன வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். காடுகளின் பூகோளம், வனவிலங்குகளின் குணம் இவர்களுக்கு அத்துப்படி!அதேநேரம், தனியார் நிறுவனங்கள் வாயிலாக தேர்வாகும் தொகுப்பூதிய காவலர்களுக்கு, காடுகளின் பூகோளம் தெரியாது. அத்துடன், வேலையில் பெரிதாக அக்கறையின்மையும், குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்யும் சூழல் இருப்பதால், காட்டு வளம் திருடு போக வாய்ப்புகள்அதிகம்!அதனால் தான், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், வனப் பாதுகாப்பில் அக்கறையுள்ள பழங்குடியினர் மற்றும் மலைவாசிகளையே வேட்டைக் காவலர் பணியில் அமர்த்துகின்றனர்; நல்ல ஊதியமும் வழங்குகின்றனர். இதனால், காட்டின் வளம் பேணப்படுவதுடன், அவர்களது வாழ்வும் வளம் பெறுகிறது. தமிழக அரசும் பழங்குடியினர் மற்றும் மலைவாசிகளுக்கு வேட்டை தடுப்பு காவலர் பணி வாய்ப்பை தந்து, அவர்களது வாழ்வாதாரத்தையும், காடுகளின் வளத்தையும் உயர்த்த வேண்டும்!அரசு பரிசீலிக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V GOPALAN
ஜன 20, 2025 15:11

To benefit dun family, Sabareesan and G square stalin has cleared more file. Accumulated looted money so far is 6 L crores . Another 20 years sun family can run the show. Inbanidhi grand son can become youth leaders. He will throw rs.10000 per vote just like that at our Dog Voters.


Anantharaman Srinivasan
ஜன 20, 2025 00:00

பெரியாரின் கேவலமான பேச்சுக்களை சீமான் போன்ற பிராமணன் அல்லாதவர்கள் தான் மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டும்.


kantharvan
ஜன 20, 2025 10:47

எனக்கு தெரிந்து ஒரு படிக்காத கிழவன் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பாதுகாத்து காத்து வைத்து இருந்த முடைநாற்றம் வீசும் சானிதனிகளை அவர்களின் ஸ்மிரிதிகளை தன்னந்தனியே கிழித்து எரிந்து செய்த மிகப்பெரிய செயல்களால் இன்றும் தணியாத கோபத்தோடு திரிகிறார்கள் அவர்கள். அவர்களின் கன்னியம் தவறிய விமர்ச்சனங்கள் மூலமே செயற்கரிய செயல்களை செய்தவர்தான் பெரியார் என்பது புலனாகிறது.


Anantharaman Srinivasan
ஜன 19, 2025 23:56

திராவிட கழக பெரியாரின் , 70 ஆண்டுகால பித்தலாட்ட பேச்சுக்கள், சீமான் அண்ணாமலை போன்றவர்கள் மூலம் சமூக வீதியில் ஆடுகள் தோல் உரித்து காசாப்பு கடையில் தொங்குவதுபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது.


Sridhar
ஜன 19, 2025 11:50

அந்த அருவருப்பான பேர்வழியின் உளறல் "பொன்" மொழிகளை அரசுடைமையாகி கௌரவப்படுத்தும் அளவுக்கு அவை என்ன சிறப்பு மிக்கதா? அந்த ஆள் இறக்கும்வரை இல்லாத ஒரு பிம்பம் இறந்தபிறகு ரொம்பவே நுண்ணியமாக கட்டுமரத்தால் அமைக்கப்பட்டது. அப்போது காமராஜர் இறந்து, காங்கிரஸ் தமிழகத்தில் அழிந்துபோனதால், கட்டுவின் பொய் பித்தலாட்டங்களுக்கு எதிர் வினை ஆற்ற சரியான ஆளுமைகள் இல்லாமல் போனது. இருப்பினும் நிறைய எழுத்தாளர்களும் சரித்திர ஆய்வாளர்களும் ராம்சாமி பற்றிய உண்மைகளை அப்பபோது வெளியிட்டுதான் வந்திருக்கிறார்கள். ஏன் இந்த சீமான் கும்பலே 10 வருடங்களுக்கு முன்பே இக்கருத்துக்களை சொல்லி ராம்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் பொங்காத ராம்சாமி கும்பல் ஏன் இப்போது இவ்வளவு பொங்குகிறது? சார் விஷத்தை திசைதிருப்புவதற்கு மட்டும் என்று நினைக்கமுடியவில்லை. கோயபெல்ஸ் பிரச்சார உக்திகளில் ஒன்று பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் மனதின் அடித்தளத்தில் ஆழமாக பதித்தால், ஒரு நிலையில் சமூகத்தின் ஒரு பகுதியினராவது அதை முழுவதுமாக நம்பி, அந்த கருத்துக்களில் மிகுந்த பிடிப்புடன் மாறிவிடுவார்கள். கட்டு செய்த ஐம்பது வருட கோயபெல்ஸ் பிரச்சாரத்தில், அவ்வாறே நிறைய அப்பாவி தமிழ் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு உண்மையே தெரியாமல் ஒரு அசிங்க பேர்வழியை பெரிய தலைவன் போல் உருவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே ஒருசில ஊடக விவாதங்களில் தென்படும் அழுகை ஓலங்களும் மிரட்டல் கூச்சல்களும். ஒரு தவறான நபரை ஒரு தகுதியும் இல்லாத பேர்வழியை ஒருவன் தூக்கிப்பிடிக்க ஆரம்பிக்கும்போதே அதை ஒருமித்த குரலில் எதிர்க்காதது, அன்றைய அரசியல்வாதிகளின் பெரும் தவறு. போதைப்பொருளுக்கும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை எப்படி சுலபமாக மீட்கமுடியாதோ, அதேபோல் ராம்சாமியை "தந்தை" "பெரியார்" என்று சொல்லிக்கொண்டு திரியும் ஆசாமிகளையும் வெளிக்கொண்டுவருவது மிகவும் கடினம். ஆனால், இதை அப்படியே விட்டுவிட்டால், நாளைய தலைமுறை பலவிதங்களில் பாதிக்கப்படும். அவர்களுக்கு இந்த நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலோ, உண்மையான தலைவர்களை பற்றிய அறிவோ இல்லாமலே போய்விடும். நிச்சயமாக அதை அனுமதிக்க கூடாது.


kantharvan
ஜன 25, 2025 14:44

அந்த பாராம்பரியம் மிக்க உண்மையான தலைவன் குலக்கல்வி மகன் அரசியல் அநாதை தானே???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை