எஸ்.ராம்சீனி, செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நமக்கும், சீனாவுக்கும் இடையே, 1914 முதல் பிரச்னை தான். அக்சாய் சின் மற்றும் மக்மாகன் கோடு ஆகிய இரண்டு எல்லை பிரச்னைகள் உண்டு. அக்சாய் சின், நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லடாக்கின்வடமேற்கே அமைந்துள்ளது; மக்மாகன் கோடு, அருணாசல பிரதேசம் - திபெத் இடையே அமைந்துள்ளது.காங்கிரசின் நேரு காலம் முதலே, பிரச்னை தான்; 1962ல் சண்டையே நடந்தது.காங்., ஆட்சிக் காலத்தில் அவ்வப்போது அத்துமீறல்களும், எல்லை மீறல்களும் நடந்த வண்ணம் இருந்தன. மோடி அரசு சற்று கடுமையாக எதிர்க்கத் துவங்கியதும், 2020ல் கடுமையான மோதல், 2022ல் ஒரு மோதல் நடந்தது.வரலாற்று நிகழ்வாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியா வரவழைத்து, நம் மகாபலிபுரத்தில்பேச்சு நடத்தினார் மோடி. எப்போதுமே மென்மைப்போக்கை கடைப்பிடித்து வந்த நாம், பொருளாதார ரீதியாக தலைநிமிரத் துவங்கியதையும், நம் அண்டை நாடுகள் வாயிலாக நடக்கும் சீனாவின் மறைமுக தாக்குதல்களை சமாளிப்பதையும் கண்டு, சீனா சற்று சுதாரிக்கிறது.சமீபத்தில், 'இருவரும் நல்லிணக்கத்துடன்இருப்போம்' என மோடியிடம் கூறி இருக்கிறார் ஷி ஜின்பிங். இந்த முன்னேற்றத்தைக் கண்டு, காங்கிரஸ் கதிகலங்கி போயிருக்கிறது.'இவ்வளவு நாளா நாம செய்யாததை மோடி செய்து, நல்ல பேர் வாங்கிட்டா, அடுத்த தேர்தலில், நம் கதை கந்தல் தான்' என்ற எண்ண ஓட்டத்துடன், 'இந்தியா- - சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில்,இரு நாட்டு ராணுவம் ரோந்துப்பணி மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 'பின்னடைவை சந்தித்த, பா.ஜ.,வின் மோசமான வெளியுறவு கொள்கை, தீர்வை நோக்கி திரும்புகிறது. 'அங்கு 2020க்கு முந்தைய நிலை மீட்டெடுக்கப்படும் என நம்புகிறோம்' என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், திருவாய் மலர்ந்தருளி உள்ளார்.வலுவான வெளியுறவு கொள்கை இருந்திருந்தால், அக்சாய் சின் பிரச்னை எழுந்தபோதே, அருணாசல பிரதேச எல்லையில் சீனா சீட்டாட்டம் நடத்த துவங்கியபோதே, அப்போதைய காங்கிரஸ் அரசு கடுமையானநடவடிக்கை எடுத்து, சீனாவை ஓட ஓட விரட்டி அடித்திருக்க வேண்டும் அல்லவா?அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, இப்போது மோடி அந்த தீர்வை நோக்கி செல்கையில், 'பிக் பிரதர்' போல பேசுகிறதுகாங்கிரஸ்.மிஸ்டர் ஜெய்ராம்... அவசரப்படாதீர்கள்;நீங்கள் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது! ஜன நாயக வழியில் காஷ்மீர்!
அ.சேகர்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாடு சுதந்திரம்
அடைந்த பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மட்டும்சிறப்பு அந்தஸ்து தரப்பட்டு,
பெயரளவில் மட்டுமே நம்முடன் இணக்கமான முறையில் இருந்து வந்தது. அதற்கு
முக்கிய காரணம், அங்கு வசித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.நம்
எல்லையில் இருந்து, அன்று முதல்தற்போது வரை தொடர்ந்துதொல்லைகள் கொடுத்து
வரும் பாகிஸ்தான் ஆதரவு நபர்கள் சிலரால், நம் நாட்டு ராணுவ வீரர்கள்
பாதிக்கப்பட்டு வந்தது, நாம் அனைவரும்அறிந்ததே.காஷ்மீர் மாநிலமே,
ஏதோ இஸ்லாமிய சகோதரர்களுக்கு மட்டுமேசொந்தம் என்பதைப் போன்ற பிம்பத்தை,
ஷேக்அப்துல்லா குடும்பம், அப்போதைய பிரதமர்நேருவின் ஆதரவுடன் ஆட்சி
செய்ததும், காஷ்மீர் மாநிலத்தை ேஷக் அப்துல்லா பிரிக்க முயற்சி செய்ததை,
காலதாமதமாக உணர்ந்த நேரு, அவரைக் கைது செய்ததும் வரலாறு.காஷ்மீரில்
தேர்தல்கள் எப்போதும், நேர்மையாகநடப்பது இல்லை. காஷ்மீர் ரத்த பூமியாக
மாறி, அதை நாம் பாகிஸ்தானிடம் இழந்து விடும் சூழல், 1991 வரை இருந்தது.ஆனால்,
1996ல் பிரதமராக இருந்த நரசிம்மராவ், இன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் தோவலை காஷ்மீருக்கு அனுப்பி, முதல்முறையாக,நேர்மையான முறையில்தேர்தலை
நடத்த உதவினார். அடுத்தடுத்து காஷ்மீரில் தொடர்ந்து தேர்தல்கள்
நடந்தாலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தல்கள் காரணமாக, காஷ்மீர்மக்கள்
ஓட்டுச்சாவடி பக்கம் போவதற்கு அஞ்சுவர்; ஓட்டுப்பதிவும் சொற்பமாகவே
நடக்கும்.கடந்த, 2014 லோக்சபாதேர்தலில், காஷ்மீரில் மூன்று
தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றது,அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
மேலும், காஷ்மீர் மக்கள், மறுமலர்ச்சியை எதிர்பார்க்கின்றனர் என்பதையும்
புரிந்து கொள்ள முடிந்தது.இதன் வாயிலாக மத்திய அரசின் செயல் திட்டங்கள் அங்கு செயல்படத் துவங்கி, காஷ்மீர் மக்கள் நல்வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.பிறகு,
மிகவும்துணிச்சலாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க
உருவாக்கப்பட்ட, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்க, பா.ஜ., அரசு
முழு முயற்சி எடுத்து, வெற்றி கண்டது.தற்போது நடந்து முடிந்த
சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள, 90 தொகுதிகளில்,ஜம்மு - காஷ்மீர் தேசிய
மாநாட்டு கட்சி, 42 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதன் ஓட்டு சதவீதம்
23.43 தான். பா.ஜ., 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுஉள்ளது; ஓட்டு
சதவீதம்,25.64. சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர்களின் ஒட்டுமொத்த
சதவீதம், 24.83.இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள
வேண்டியதுஎன்னவெனில், பா.ஜ.,வின் செயல் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீருக்கு
தேவை என்பதை அம்மாநிலமக்கள் உணர்ந்துஉள்ளனர் என்பது தான். 'காஷ்மீரை
விட, ஜம்மு பகுதி மக்கள்தான், அதிகமாக பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ளனர்' என
சிலர் வாதிட்டாலும்,அப்பகுதி மக்கள் அமைதியாய் வாழ்கின்றனர் என்பதை,
காஷ்மீர் மக்கள் உணரத் துவங்கும்போது, பிரிவு 370 தேவையே இல்லை என்பதற்கு
முழு அங்கீகாரம் கிடைத்ததாகி விடும்.நாட்டைத் துண்டாடஎத்தனித்த
ேஷக் அப்துல்லாவின் குடும்பப்பிடியிலிருந்து காஷ்மீர் மீண்டால், நம்
நாட்டில் முழுஅமைதி நிலவ வழி பிறந்து விடும். தற்போது, ேஷக்கின் பேரன் ஒமர்
அப்துல்லா, முதல்வராக பதவி ஏற்றிருந்தாலும், சட்டசபையில் பா.ஜ.,
எதிர்க்கட்சியாக அமரப் போவதால், அவரால் தன்னிச்சையாக இனி செயல்பட முடியாது.இவ்வளவு காலம் பொறுத்த நாம், இன்னும்ஐந்தாண்டு காலம் பொறுக்கமாட்டோமா என்ன!