ஆர்.சுதர்சன சக்கரவர்த்தி, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்போது, மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் இறந்தால், 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவிக்கின்றனர். அதிகாரிகள், அரசை தவறாக வழி நடத்துகின்றனர்' என, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். கூட்டணிக் கட்சிக்குள் இருந்தபடி இப்படி கேட்கலாமா வேல்முருகன்? கள்ளச்சாராய இறப்பு என்பது வேறு; இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்பு என்பது வேறு. எப்படி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சையால் கழகம்ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுகிறதோ, அதுபோல, குடிகாரர்கள் குடிப்பதால்தான், ஆட்சி நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன், காவல்துறை, கழக பொறுப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் பலன் கிடைக்கிறது. அதனால் தான், அது நல்ல சாராயமோ, கள்ளச்சாராயமோ, எந்த சாராயம் குடித்து இறந்தாலும், அரசு தாராளமாக இழப்பீடு வழங்குகிறது.அதனால், இயற்கை பேரிடர்களினால் உயிர் இழப்பவர்களை, இவர்களோடு சேர்த்து ஒப்பிடுவதே தவறு.அவர்களால் அரசுக்கு, கழக கண்மணிகளுக்கு வருமானம் உண்டு; இவர்களால் யாருக்கு என்ன லாபம்?நீர்நிலைகளை ஆக்கிரமித்தும், புறம்போக்கு நிலங்களில் குடிசைகள் அமைத்து, நீர்வழித்தடங்களை தடுத்துக் கொண்டும் அமர்ந்திருந்தால், அதற்கு அரசு எப்படி பொறுப்பாக முடியும்?வெறும் அனுதாபத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அவர்களுக்கு, 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதே பெரிய விஷயம்!அதனால், அதையும், இதையும் போட்டுகுழப்பிக் கொள்ளாதீர்கள் வேல்முருகன்! கருணாநிதியின் சாதனைகள்!
என்.ராமகிருஷ்ணன்,
பழனி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:'கருணாநிதி, 75
ஆண்டுகள்தமிழக மக்களுக்காக வாழ்ந்து,ஏராளமான தியாகங்களையும், சாதனைகளையும்
செய்தவர். அதனால், அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை தான் வைப்போம்'
என்று, சனாதனத்தை ஒழிக்க, பூமிக்கு அவதாரம் எடுத்த வந்த உதயநிதி
கூறுகிறார்.அவர் கூறியபடி,கருணாநிதி தமிழகத்திற்கு செய்த தியாகம், சாதனைகள் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்...
அண்ணாதுரை இதயத்தில் இடம்பெற்ற, ஈ.வெ.கி.சம்பத், சிவாஜி கணேசன்,
கவிஞர்கண்ணதாசன் போன்றோரை தன் சூழ்ச்சியால், தி.மு.க.,விலிருந்து
வெளியேற்றியது, கருணாநிதியின் முதல் சாதனை! அண்ணாதுரை இறந்த
பின், எம்.ஜி.ஆரைகாக்கா பிடித்து முதல்வர்பதவியையும், கட்சியையும்
கைப்பற்றிய கருணாநிதி, ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க, கச்சத்தீவை
இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது, அவர் தமிழர்களுக்காக செய்த அளப்பறியா
தியாகம்! காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டுக்
கொடுத்து, மீனவர்களும், விவசாயிகளும் இன்று வரை சொல்லொண்ணா துயரத்திற்கு
காரணமாக இருப்பது கருணாநிதியின் அடுத்த சாதனை! ஹிந்திக்கு எதிராக போராடுவதாக நடித்து, தன் குடும்பத்தாரை மட்டும் ஹிந்தி படிக்க வைத்தது, தமிழுக்காக கருணாநிதி செய்த தியாகம்!
தன் ஆட்சியில், 5 ஏக்கர்நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு மட்டும்
இலவச மின்சாரம் வழங்கினார், எம்.ஜி.ஆர்., அதனால், மின் வாரியத்திற்கு
கடன் இல்லாமல் இருந்தது. ஆனால், 1989ல் மீண்டும் ஆட்சிக்குவருவதற்காக,
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்று அறிவித்தார், கருணாநிதி. விளைவு... இன்று மின் வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்!இதுவும், அவர் சாதனைகளில் ஒன்று!
திருச்சியை துணை நகரமாக்க எம்.ஜி.ஆர்., முயற்சித்தபோது, அத்திட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து, நடைபெறவிடாமல் தடுத்து, இன்று சென்னை நகரமே மக்கள்
தொகையாலும், வெள்ளப்பெருக்காலும்அழிந்து வருவதற்கு மூலக்காரணம், கருணாநிதி!இப்படி, கருணாநிதி தமிழகத்திற்கு செய்த சாதனைகள் அனேகம்... அனேகம்!அவர்
எப்படி சென்னைக்கு வந்தார், தற்போது, அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு
எவ்வளவு என்று உண்மை கண்டறியும்சோதனை நடத்தினால், அந்த இயந்திரமே கணக்கு
தெரியாமல் பழுதாகிவிடும். அதனால், அதிர்ஷ்டத்தால் பதவிக்கு வந்த உதயநிதி, உதவாக்கரை பதில்களை கூறாமல், நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்தட்டும்! கு கேஷை முன்மாதிரியாக கொள்ளுங்கள்!
ரேவதி
பாலு, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
விஸ்வநாதன்ஆனந்திற்குப் பின், செஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை
பெற்று, இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும், 18
வயது இளைஞர் குகேஷை வாழ்த்தி, மனமார பாராட்டும்அதே நேரத்தில், அவர்
தன்வெற்றியின் வாயிலாக, இளைய சமுதாயத்திற்கு சொல்லி இருக்கும் செய்தி
மிகவும் முக்கியமானது. 'பெரிதினும் பெரிது கேள்!'எனும்
பாரதியாரின் வார்த்தைக்கேற்ப, தன்,7 வயதில், விஸ்வநாதன்ஆனந்தும் -
கார்ல்சனும்செஸ் ஆடியதைப் பார்த்து,'இதே மாதிரி நாமும் ஒரு நாள் செஸ் ஆடி
ஜெயிக்க வேண்டும்' என்று நினைத்ததாக கூறியுள்ளார்,குகேஷ். அன்றிலிருந்து,
அதே நினைப்பாக, முனைப்பாகஉழைத்து, தன் லட்சியத்தை,கனவை, 18 வயதில்
நிறைவேற்றிய இந்த இளைஞர், நம்மை பிரமிக்க வைக்கிறார். சிறு
வயதிலேயே எப்பேர்ப்பட்ட லட்சியத்துடன்கூடிய சீரான எண்ணங்களும், அயராத
உழைப்பும்இருந்தால், இது சாத்தியம் என்று எண்ணி நம்மை வியப்பில்
ஆழ்த்துகிறார். டாஸ்மாக் பாரில் உட்கார்ந்து
குடித்தபடியே,சிகரெட்டை ஊதியபடி அவ்வழியே போகிற, வருகிற பெண்களை கேலி
செய்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என்பது போல, வெளிவரும் சினிமா
படங்களைப் பார்த்து, கெட்டழியும் இளைஞர்களுக்கு மத்தியில், குகேஷ் போன்ற
இளைஞர்களும் தமிழகத்தில் இருக்கின்றனர், பெரும் சாதனைபடைக்கின்றனர் என்பது,
நமக்கு எவ்வளவு பெருமையாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கிறது!தமிழக இளைஞர்கள்இவரை அல்லவா முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.இதைத்
தானே, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும், ஒரு லட்சியத்தை
முன்னுறுத்தி, 'கனவுகாணுங்கள்!' என்று இளையசமுதாயத்திற்கு வழிகாட்டினார்!இளைஞர்களே... வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய, குகேஷை முன்மாதிரியாக கொள்ளுங்கள்!