உள்ளூர் செய்திகள்

ஜனநாயகமா இது?

ஆர்.சுதர்சன சக்கரவர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்., பார்லிமென்டை நடத்த ஒத்துழைப்புஅளிக்கவில்லை. அவர்களுக்கு ஜனநாயகம்மற்றும் பார்லிமென்ட் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது. ராஜ்யசபாதலைவர் குறித்து சபைக்கு வெளியே கருத்து தெரிவிப்பது கண்டனத்துக்குரியது'என்று குமுறி இருக்கிறார், மத்திய பா.ஜ., அமைச்சர் நட்டா.காங்., கட்சிக்கு எப்படி ஜனநாயகத்தின் மீதும், பார்லிமென்ட் மீதும் நம்பிக்கை இருக்கும்?சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், தங்கள், 'இண்டியா' கூட்டணி வெல்லும். தான் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து கோலோச்சலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த ராகுலின் கனவு தகர்ந்து, புஸ்வாணமாகி, பகல் கனவானதில் உண்டான வெறுப்பும், விரக்தியும் எப்படி பார்லிமென்டை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கும்?நாட்டு நடப்பை புரிந்து, மக்களின் தேவைகள் குறித்து விவாதிப்பதை விடுத்து, குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தால், சபை எப்படி இயங்கும்...விவாதங்கள் எப்படி நடக்கும்? 'அதானியை கைது செய்!' என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தால், ராஜ்ய சபா தலைவர், சபையை ஒத்தி வைக்காமல், வேடிக்கையாபார்த்துக் கொண்டிருப்பார்?நாட்டிற்குள் அதானி விஷயம் மட்டும் தான், விவாதிக்க வேண்டி உள்ளதா... வேறு பிரச்னைகளே இல்லையா? பார்லிமென்ட் சுமுகமாக இயங்கி, விவாதங்கள் நிகழ வேண்டுமென்றால், நடைமுறைகளை தகர்த்து, பிரதமர் மோடியின் இருக்கையில் ராகுலை அமர்த்தி வையுங்கள்.அதில், ராகுல் சொகுசாக அமர்ந்து, சுகமாக ஒரு துாக்கம் போடுவார். பா.ஜ.,வினர் எந்த இடையூறுகளும் இன்றி, சுமுகமாக சபையை நடத்தலாம். விவாதம் செய்யலாம்!ஜனநாயகமாவது, வெங்காயமாவது!

ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!

எல்.மூர்த்தி, கோவையில் இருந்து எழுதுகிறார்:எம்.ஜி.ஆரால் உருவாக்கி,ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க., இன்று,சிலந்தி வலையில் சிக்கியபுழுவாக, பழனிசாமியின் கையில் சிக்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மையம் கொண்ட அரசியல்புயல், அ.தி.மு.க.,வை நோக்கி நகர்ந்து, அக்கட்சியை பல அணிகளாகஉடைத்தது.ஜெயலலிதா முதல்வராகஇருந்தபோது, வழக்குகளில் சிக்கி சிறை சென்ற போதெல்லாம் முதல்வர்பொறுப்பை, தன் நம்பிக்கைக்கு உரிய பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து,சிறையில் இருந்தவாறே, ரிமோட் வாயிலாக அவரைஇயக்கினார்.ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, பழனிசாமியையாருக்கும் தெரியாது. அவரது இறப்புக்கு பின், கட்சிப் பொறுப்பை ஏற்ற சசிகலா செய்த தில்லாலங்கடி வேலைகள், நினைவிருக்கும் வரை மறக்க முடியாதவை.விதியின் விளையாட்டில்,ஆட்சி பொறுப்பை, பழனிசாமியிடம் நம்பிக்கொடுத்து விட்டு, சிறைக்குசென்ற சசிகலாவை, ஒருமுறை கூட சிறைக்கு சென்று பார்த்ததில்லை, பழனிசாமி.சிறையில் இருந்து விடுதலையான பின்பும் சசிகலாவை, அ.தி.மு.க.,வின் வாசலை கூட மிதிக்கவிடவில்லை. இதைத்தான்,'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது' என்கின்றனரோ?ஜெயலலிதா ஆட்சியில்கவுரவமாக மதிக்கப்பட்டபன்னீர்செல்வம், இப்போதுஇருக்கும் இடம் தெரியவில்லை. தர்மயுத்தம் நடத்திய அவர், பழனிசாமிஎனும் மண்குதிரையை நம்பி,அ.தி.மு.க., எனும் கடலுக்குள் இறங்கி, அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, நீதிமன்றத்தை நோக்கி நீந்திக்கொண்டிருக்கிறார், தனக்குநியாயம் கிடைக்கும் என்றநம்பிக்கையுடன்!கட்டுக்கோப்புடன் வளர்த்த அ.தி.மு.க., எனும்ஆலமரம், மக்கள் ஆதரவைஇழந்து, வீழ்ச்சியை நோக்கி,இன்று சரிந்து கொண்டுஇருக்கிறது.இந்த லட்சணத்தில், 'அ.தி.மு.க.,வை எவரும் அசைக்கவோ, அழிக்கவோமுடியாது' என கொக்கரிக்கிறார் பழனிசாமி.போதாக்குறைக்கு, பா.ஜ.,வுடன் மோதி, மத்திய அரசுடன் இருந்த நட்பையும் முறித்து விட்டார்.அ.தி.மு.க., வை அழிக்க, வேறு யாரும் தேவையில்லை. அக்கட்சிக்குள்ளேயே அதற்கு ஆட்கள் இருக்கின்றனர்...2026 சட்ட சபை தேர்தலில்பழனிசாமிக்கு வேட்டு வைக்க!வேலுமணி பங்கேற்ற களஆய்வுக்கூட்டம் கலகலப்பில் ஆரம்பித்து, கைகலப்பில் முடிந்தது. இதை, 'கள ஆய்வு கூட்டம் அல்ல; கலவர ஆய்வுக்கூட்டம்' என்று உதயநிதி, தன் பங்குக்கு கிண்டல் அடித்துள்ளார்.பிடிவாத குணத்தை பழனிசாமி கைவிட மறுத்தால், ஆலமரமாக உயர்ந்து வளர்ந்த, அ.தி.மு.க.,வை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!

அனைவரையும் கைது செய்யுங்கள்!

ஆர்.வேணுகோபாலன், தேனியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மழை வெள்ளத்தை தடுக்க ஒதுக்கிய, 4,000 கோடி ரூபாய் என்ன ஆயிற்று?' என்று நாக்கின் மீது பல்லைப் போட்டு, குற்றம்சாட்டுகின்றனர், எதிர்க்கட்சிகள்.நீர்நிலைகளை துார்வாரி, மழை வெள்ளத்தை தடுத்து நிறுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, எப்படி நிவாரண உதவி வழங்க முடியும்?இந்த தொலைநோக்கு திட்டம் விளங்காமல், எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டுகின்றன.தமிழக மக்களுக்கு, இரவு உணவைத் தவிர, காலை டிபன், மதிய உணவுபோன்றவற்றை அரசே வழங்கி விடுகிறது. அடுத்துஆட்சிக்கு வரும்போது, இரவு உணவு வழங்கவும் ஒரு திட்டம் வகுக்கப்படும்.ஏற்கனவே, மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய், பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியர் என, அனைவருக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிக் கொண்டுஇருக்கிறது அரசு.பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் கிடையாது.இப்படி, மக்களை பணத்தாலும், இலவசங்களாலும் வளைத்துப் பிடித்து,ஓட்டுப்போட தயார் செய்துவைத்திருக்கையில், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினால்,சும்மா இருக்க முடியுமா...இதோ, கனிமொழிக்கு எதிராக அவதுாறு பரப்பியதாக வழக்கு தொடுக்கப்பட்டு, பா.ஜ., நிர்வாகிஎச்.ராஜாவுக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டுசிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துஉள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.இனி அப்படியே, திராவிட மாடல் அரசை எதிர்க்கும், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை உட்பட பழனிசாமி, ராமதாஸ், அன்புமணி, பிரேமலதா, சீமான், கோமான் போன்ற அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறைக்குள் அனுப்பி விட்டால், நிம்மதியாக ஆட்சி நடத்தி, மீண்டும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள்அரியாசனத்தில் அமரலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 16, 2024 14:08

தேனி வேணுகோபாலன் அவர்கள் அரசின் நோக்கத்தைப் புட்டுப்புட்டு வைத்துள்ளார் ..........


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 16, 2024 14:05

சுதர்சன சக்கரவர்த்தி விரக்தியில் சொல்லியிருந்தாலும் அவருடைய உணர்வுகள் நூற்றுக்கு நூறு நியாயமானவையே .....


ellar
டிச 16, 2024 10:38

சுதர்சன சக்கரவர்த்தி கேட்டிருக்கும் கேள்விகளில் இன்னும் ஒன்று இரண்டு கேள்வி இருக்கிறது அதானி பணம் கொடுத்ததனால் அதனால் அவரை கைது செய்ய வேண்டும் அப்படி என்றால் மாட்டு தீவன ஊழலில் லாலு பிரசாத்தை ஏன் கைது செய்தார்கள் பணம் கொடுத்த கருவூல அதிகாரி அல்லவா கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் பிரசாதை கைது செய்தது சரி என்றால் தற்பொழுது பணம் வாங்கியவர்கள் யாரோ அவர்களை தானே கைது செய்ய வேண்டும் அதான் நீ கைது புரியவில்லை


ellar
டிச 16, 2024 10:27

வெள்ள நிவாரணத்தை பொறுத்த அளவில் கடந்த 40 வருடங்களில் குளங்களுக்கும் நீர் நிலைகளுக்கும் நீர் பாதைகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு இயற்கை திருப்பிக் கொடுக்கும் பாடம் தான் என்பதை மனதில் கொள்வோம்


ellar
டிச 16, 2024 10:25

திருமூர்த்தி அவர்கள் பழனிச்சாமி இவ்வாறு ஒரு வியூகம் வைத்து செயல்படுவதற்கு அடிப்படை காரணம் தற்போது ஆளும் கட்சிக்கு இருப்பது என்பதை அறியாதவரா அல்லது மறைக்கிறாரா அல்லது அதைப் பற்றி சொல்ல அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லையா


முக்கிய வீடியோ