உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / போதுமடா சாமி திராவிட மாடல்!

போதுமடா சாமி திராவிட மாடல்!

செ.சரவணன், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்தி பேசாத மாநிலங்கள், ஹிந்தி மாதம் கொண்டாடுவதைநிறுத்த வேண்டும்' என்று பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், ஹிந்தி கற்றுக் கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும், தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபாவே தமிழகத்தில் தான் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில், ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. கிணற்றுத் தவளையாக இருந்த தமிழன் இன்று, நாட்டின் பல்வேறுமாநிலங்களில் சென்று பணிபுரிவதற்கு, ஹிந்தி மொழியே கை கொடுக்கிறது. மீண்டும் மீண்டும், பழைய உளுத்துப் போன ஹிந்தி எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமேவைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழனை ஏமாற்ற முடியும்?'புலி வருது புலி வருது... எல்லாரும் என் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள்' என்ற கதையாக, மீண்டும் மீண்டும் ஹிந்தி எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே துாக்கிப் பிடிக்காமல், தமிழகத்தை வளர்ச்சி பாதையில்கொண்டு செல்ல, பிற மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பணி செய்வோருடன் உரையாடமக்களுக்கு வசதி செய்யுங்கள் முதல்வரே!மேற்படி காரணங்களால், ஹிந்தி மொழி அவசியம் என்று உணர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், ஹிந்தி மொழியையும்ஒரு பயிற்று பாடமாக வைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். அரசு பள்ளியில் படித்த என்னை போன்றவர்கள், ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால், மற்ற மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் செய்ய இயலாததை எண்ணி, ஒவ்வொரு நாளும் வருத்தம் அடைகிறோம்; எங்களிடம் பணிபுரிய வரும்ஹிந்தி மொழி பேசுபவர்களையும், வேலை வாங்க முடியாமல் அவதியுறுகிறோம்.தமிழனை தமிழ் மட்டுமே படிக்க வைத்து,அவனை வேறு மாநிலம் செல்ல விடாமல்தடுத்து, இலவசங்களை கொடுத்து, மூளையை மழுங்கடித்து, தனக்கு மட்டுமேஓட்டு போடும் வகையில் டாஸ்மாக்கை ஊற்றி வளர்த்து... போதுமடா சாமி,திராவிட மாடல்!

திருப்பிக் கொடுத்ததே ஆதாரம் தானே!

ஆர்.ரபீந்த், பெங்களூரில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஒவ்வொரு தேர்தலின்போதும் வரிசையில் நின்று வாக்களிக்கும் பல வாக்காளர்களுக்கு சொந்தமாக குடியிருக்க, 10க்கு 10 இடம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்,வெற்றி பெற்று ஆட்சியில்அமரும் அரசியல்வாதிகள்,பல இடங்களை வளைத்துபோடுவதை நினைத்தால்ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.கர்நாடகாவில் முதல்வர்சித்தராமையாவின் மனைவிக்கு, 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தவிபரங்கள் வெளியே தெரிந்தஉடன், பிரச்னை பெரிதாகிவிடுமோ என பயந்து, அந்த இடங்களை திரும்ப கொடுத்து விட்டனர். அதற்காக குற்றம் இல்லை என்றாகி விடுமா?காங்., தலைவர் கார்கேகுடும்பத்துக்கும், 5 ஏக்கர்நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.'எந்த அடிப்படையில் கார்கேகுடும்பத்துக்கு அரசு நிலம்ஒதுக்கப்பட்டது?' எனக் கேட்டு, கர்நாடக தலைமைச்செயலர் ஷாலினிக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்கடிதம் எழுதியுள்ளார்.தன் கதையும் கந்தல் ஆகிவிடும் என்று பயந்த காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன் குடும்பத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு கர்நாடகஅரசு ஒதுக்கிய, 5 ஏக்கர்நிலத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்.இந்த நிலையில் பா.ஜ., மீது இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.'நாங்கள் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கினோம் என நிரூபித்து காட்ட முடியுமா?' என்று சவால் விடுகின்றனர். நிலத்தைத் திரும்பக் கொடுப்பது ஒன்றேபோதுமே, இவர்கள்சட்டவிரோதமாக ஒதுக்கீடு வாங்கியுள்ளனர் என்பதற்கு!

ஆர்.எஸ்.எஸ்., சேவை தமிழகத் திலும் தேவை!

பி.கே.அதுல் ஷர்மா, வடவள்ளி, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், அதிருப்தியையும் மீறி, காங்கிரசை தோற்கடித்து பா.ஜ., வென்றதற்கு ஒரே காரணம், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கடும் களப்பணி என்று, இப்போதுதெரியவந்துள்ளது.இயல்பாகவே, பலமாநிலங்களில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல், ஒரே கட்சியை, திரும்பத்திரும்ப மாநிலத்தை ஆள மக்கள் அனுமதிப்பதில்லை. ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இதற்கு உதாரணம். ஹரியானாவில் அப்படி இருந்த நிலையை தலைகீழாக மாற்றி, பா.ஜ.,வை மீண்டும் ஆட்சிக்கட்டிலில்அமர்த்தியுள்ளது, அதன் குடும்ப அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.,வலதுசாரி கொள்கைகளை,வீடுவீடாக மக்களிடம் அவர்கள் எடுத்துச் சென்ற விதமும், வேகமும் தான், பா.ஜ.,விற்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்., ஏன் தமிழகத்திலும் இதை பின்பற்றக்கூடாது? கர்நாடகாவில்முடிந்ததை, இங்கு சாதிக்க முடியாதா?சிரமம் தான்; ஏனெனில்இங்கே பா.ஜ.,வில் ஒற்றுமைஇல்லை; திராவிடக் கட்சிகள்,பா.ஜ.,வை குறித்து தவறான கருத்துக்களைப் புகுத்தியுள்ளன. இந்த பிம்பத்தை சுக்குநுாறாகஉடைக்க வேண்டியது தமிழக பா.ஜ.,வின் பொறுப்பு. ஆர்.கே.நகர் பார்முலாவைஏற்று ஓட்டு போட்ட மக்கள், ஆர்.எஸ்.எஸ்.,சின்வலதுசாரிக் கொள்கைகளைவீடுதோறும் எடுத்துச் சொல்லிய ஹரியானா பார்முலாவைப் பின்பற்றி,நேர்மையான வழியில் ஓட்டுபோட மாட்டார்களா என்ன!

துர் வாசரின் அவ தாரமா இவ ர்?

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடியின் அரசு, 150 நாட்களைத் தாண்டாதுஎன்று கணித்திருக்கிறார், காங்., இளங்கோவன்.தேவ கவுடா, சந்திரசேகர்,வாஜ்பாய் போன்ற பிரதமர்களின் ஆட்சி, அற்பஆயுளிலேயே முடிந்து போனது நமக்குத் தெரியும்.ஆனால் பிரதமர் மோடியின்ஆட்சி கடந்த, 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக நடைபோட்டதை இந்த நாடே அறியும்.ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ராஜிவ் தான் கடைசி பிரதமர் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அவரது மகன் ராகுல், எவ்வளவு முயற்சி செய்தாலும், அவரால் பிரதமராக முடியாது என்பது தான் யதார்த்தம்இந்த நிலையில் மோடியின்ஆட்சி, 150 நாட்கள் தாண்டாது என்றுகதர்ச்சட்டை இளங்கோவன்சொல்வது நிச்சயம் பலிக்காது என்று உறுதியாக சொல்ல முடியும்.தமிழகத்தில் காங்கிரஸ்கட்சி எப்படி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதோ,அதுபோல, மத்தியிலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. இளங்கோவன் போட்ட சாபம் அப்படியே பலிக்க, இவர் என்ன துர்வாச முனிவரா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Saravanaperumal Thiruvadi
அக் 21, 2024 18:35

அன்று முதல் இன்று வரை திணிப்பை தான் தமிழ்நாடு எதிர்கிறது ஆனால் வட இந்தியர்கள் இந்திய தீர்ப்பதாக தவறான பிரச்சாரம் செய்கிறார்கள் விருப்பமான மொழியை கற்றுக் கொள்ள தமிழ்நாட்டில் எப்பொழுதும் தடை கிடையாது


V GOPALAN
அக் 21, 2024 09:24

எல்லா தமிழ் மக்களும் பிற மொழிகளை கற்றுக்கொண்டு தமிழின் மஆற்றும் தமிழ் இலக்கியங்களை பிற மொழியில் தெரிவிப்பதே தமிழ் வளர்ச்சிக்கு உதவும்


Rajamani Ksheeravarneswaran
அக் 21, 2024 09:13

அனைத்து மொழிகளை அறிந்து கொள்வது அவரவர் விருப்பம்.புரட்சி கவிஞர் பாரதியார், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், புரட்சி தலைவி அம்மா போன்றோர் பன்மொழி பேச ஈழுத படிக்க தெரிந்தவர்கள் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று புரட்சி கவிஞர் பாரதியார் பாடியுள்ளார்.ஹிந்தி கற்றவர்கள் அடையார் ஆனந்த பவன் சரவணபவன், வாட்ச்மேன் , சர்வர் , மேஜை துடைக்கும் வேலை பார்க்கிறார்கள் .ஆங்கிலம் படித்தவர்கள் உலகமெங்கும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள். உலகில் அதிமாக பேசப்படும் மொழிகளில் தமிழும் ஒன்று திராவிட மாடல் குடும்பங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் ஹிந்தி இருக்கிறது .


RAMESH
அக் 21, 2024 06:26

10 ரூபாய் அதிகம் பாட்டிலுக்கு.... இந்த கள்ள பணம் எந்ந கள்வனுக்கு பிழைக்க தேவைப்படுகிறது.... திருட்டு திராவிட மாடல்


நிக்கோல்தாம்சன்
அக் 20, 2024 17:06

முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் ஹிந்தி கலந்த அரபி போன்றதொரு மொழியை பேசுகின்றனர். அவர்களிடம் அரபி மொழி வேண்டாம் தமிழ் மொழி மாத்திரம் பேசுங்க என்று இப்போது ஆளும் திராவிட கட்சி கூற முடியுமா ? அவர்களின் ஆட்டோவில் மா கி துவா என்று எழுதியிருப்பதன் பொருள் என்னவென்று இப்போது ஆளும் திராவிட கட்சி மொழிபெயர்த்து கூறுமா ? பல மொழி கலாச்சாரம் எப்போதும் நல்லதே...


sugumar s
அக் 20, 2024 16:49

1. evks would not have got even 150 votes if money spend was zero. sad and shame he talks about NaMo. 2. Like senthil balaji siddharamaiah wife / karge is very honest citizen of india as they have returned what was allocated to them. Congress zindabad. 3. TN BJP should develop more harmony and use RSS to implant more ideals in TN


sugumar s
அக் 20, 2024 16:46

DM wants TN to be fools and hence, Hindi not permitted for them. if they get awareness all of them will have to go for lowest grade jobs and many are not educated


T.sthivinayagam
அக் 20, 2024 16:13

தமிழக இறையான்மையை கா்க்க திராவிடமாடல் ஆட்சி வேணுமடா இறைவா


Rajamani Ksheeravarneswaran
அக் 21, 2024 09:24

தமிழகத்தின் இறையாண்மையை காக்க தமிழன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். பச்சை தமிழர் காமராஜர் விருதுநகரில் பெரும்பான்மையாக வசிக்கும் தெலுங்கு நாயக்கர்களால் தோற்கடிக்க பட்டார். தமிழகத்திலும் கர்நாடகாவிலும் தெலுங்கர்கள் பெரும்பாண்மையாக உள்ளனர். ரெட்டிகளும் நாயுடுகளும் கர்நாடக அரசியலில் தாக்கம் செலுத்துகின்றனர். தமிழகத்தை தெலுங்கு லாபி ஆட்சி செய்கிறது. புரட்சி தலைவர் எம்ஜி ஆரை எம்.ஆர்.. ராதா சுட்டதற்கு உண்மையான காரணம் ஒரு மலையாளி திமுகவில் ஆதிக்கம் செலுத்துவதா என்பதே. பேரறிஞர் அண்ணா ஆட்சி நடந்ததால் ராதா ஜெயிலுக்கு போனார் .அண்ணா மறைவிற்கு பின் புரட்சி தலைவர் தயவில் முதல்வரான தீயசக்தி ஆட்சியில் நன்னடத்தை காரணமாக தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே ராதா விடுதலையானார் .


Indian
அக் 20, 2024 13:18

ஹிந்தி மொழி எங்களுக்கு தேவையே இல்லை ....தமிழ் , ஆங்கிலம் மட்டும் போதும். ஆங்கிலத்தில் எங்கு வேண்டுமானாலும் உரையாடலாம்


VENKATASUBRAMANIAN
அக் 20, 2024 08:21

இளங்கோவன் காசுக்கும் பதவிக்கும் கூவும் ஜென்மம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை