உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?

ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?

எஸ்.ஆரூரான், திருவாரூரிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஒரு கோட்டை சிறிதாக்க வேண்டுமானால், அதன் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை போட்டுவிட்டால், முதல் கோடு சிறிதாகி விடும் என்பது பாலச்சந்தரின், இரு கோடுகள் தத்துவம்.'ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கு வதில் கருணாநிதி வல்லவர்' என்பது, காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனின் கருத்து. தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த இரண்டையும் கலந்து கட்டி அடித்து, 'ஸ்கோர்' எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 4,000 கோடி ரூபாயில், 4 ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என்பது, தற்போது பெய்துள்ளசாதாரண மழையிலேயே வெட்ட வெளிச்சமாகி விட்டது. அந்த 4,000 கோடி ரூபாயும், எந்த பள்ளத்தில் எப்படி விழுந்து தொலைந்தது என்பது கழகத் தலைமை மட்டுமே அறிந்த ரகசியம்.அந்த கோளாறை திசைதிருப்ப, முதல்வர் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான், தமிழ்த்தாய் வாழ்த்தை கவர்னர் ரவி அவமரியாதை செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும், மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறும் குற்றச்சாட்டும்.இதில் வேடிக்கையும், வினோதமும் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், இந்த விஷயத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு பக்க வாத்தியமாக, ஒத்து ஊதிக் கொண்டிருப்பதுதான்.கவர்னர் ரவி தமிழர் அல்ல; ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை கூட, ஒவ்வொரு விழாவிலும் முழுமையாகப் பாடுவேன் என்பதையும், அதை பக்தி சிரத்தையுடன், பெருமையோடும் அட்சரம் பிசகாமல் பாடுவேன் என்றும் கூறுகிறார்.ஆனால், வெள்ளத்தடுப்பு பணிகளில் தமிழக அரசு செய்துள்ள தில்லாலங்கடியைதிசைதிருப்ப, தமிழ்த்தாய் வாழ்த்தை வம்புக்கு இழுத்திருக்கிறார்.அதோடு, 'தமிழ் எங்கள் இனம். அது எங்கள் உயிர் மூச்சு. தமிழ்மொழியைக்காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள்' என்றும் உருட்டி இருக்கிறார் நம் முதல்வர்.தமிழ் மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்கு கொடுத்தவர்களில் எத்தனை பேர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்? சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறோம்! அவசரநிலை காலத்தில் உங்கள் உயிரை காக்கத் தன் உயிரையே களப்பலியாக கொடுத்த சிட்டிபாபுவின் குடும்பத்திற்கு, உங்கள் கட்சி என்ன மரியாதை செய்தது? அந்த சிட்டிபாபுவின் மகனுக்கு சீருடை அணிவித்து, அறிவாலயவாசலில் செக்யூரிட்டியாகத் தானேநிப்பாட்டி வைத்திருக்கிறீர்கள்?தமிழ் மொழிக்காக நெருப்பில் வெந்தது,உங்கள் பாசாங்கு பேச்சுக்களால் மதிமயங்கிய விவசாயிகளும், அப்பாவி கூலித் தொழிலாளிகளும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்! தமிழக முதல்வருக்கும், அவரது அமைச்சர்களுக்கும், இன்னும் கழகத்திலுள்ளமுக்கிய பிரமுகர்களுக்கும், அ.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., - கம்யூனிஸ்ட்கள் போன்ற, இன்னபிற அரசியல் கட்சிகளுக்கும்,ஒரு சவால்...கவர்னர் மாளிகையிலேயே ஒரு கூட்டம்நடத்துவோம்; அதில் முதல்வர் உட்பட, மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளட்டும். முதலில் தமிழர் அல்லாத கவர்னர் ரவி துவங்கி, முதல்வர், அவரது அமைச்சரவைசகாக்கள், கழக முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி பக்தி சிரத்தையோடு பாட வேண்டும்.சவாலுக்குத் தயாரா?

ஜாதி பேசினால் சாதிக்க முடியாது!

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை,குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், ஒரு காலத்தில் மொத்த அரசியல்வாதிகளையும் திரும்பிப் பார்க்க வைத்த கட்சி, பா.ம.க., தான். ஆனால், முயல் வேகத்தில்வளர்ந்து, ஜாதி போர்வை போர்த்தியதால், ஆமை வேகத்தில் தேங்கி தவித்து வருகிறது.வன்னியர் சமூகத்தினர்ஓட்டுகள் மட்டுமே, ஆட்சியை பிடிக்க உதவாதுஎன்று கணிப்பு இல்லாததால், பா.ம.க., இன்னும் இலக்கை அடையாமல் தனி மரமாக நிற்கிறது.கடந்த லோக்சபா தேர்தலில், எவ்வளவோபோராடியும் பா.ம.க.,வால்வெற்றி பெற முடியவில்லை.'அதற்கு காரணம் பா.ஜ.,வுடனான கூட்டணி'என, பலரும் பா.ம.க., மீது விமர்சனம் வைத்தனர்; ஆனால், அதில் உண்மைஇல்லை. தமிழகத்தை தன் மகன் அன்புமணி ஆளவேண்டும் என ஆசைப்படும் ராமதாசிடம், அதற்கானவியூகங்களோ, செயல் திட்டங்களோ இல்லை.வெறும் ஜாதி பிரிவினைபேசியே கட்சியை வளர்க்கிறார். அடுத்த தேர்தலில், எப்படியாவது,ஜெயிக்கும் கூட்டணியில்சேர்ந்து வெற்றி பெற்றால்,கூட்டணி ஆட்சி என்று கேட்டு பதவி பெறலாம்என்றும் நினைக்கிறார்.ஆனால், குறிப்பிட்ட ஜாதிக்கான கட்சியாகஇருக்கும் வரை, பா.ம.க.,வால்பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாது.

என்ன தீர் வோ தெரியவில்லை!

அ.குணசேகரன், வழக்கறிஞர்,புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மற்ற அரசு அலுவலகங்களை விட, பத்திரப் பதிவு அலுவலகத்தினர்ஊழலில் கொடி கட்டிப்பறக்கின்றனர் என்பதுஇப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.'என்ன செய்யிறது... வேலை ஆகணுமே...' என்ற மனநிலையில் தள்ளப்பட்டுள்ள நாம் அனைவரும், பத்திரப்பதிவு அலுவலகத்தினருக்கு லஞ்சம் கொடுத்தே, காசை இழந்து விடுகிறோம் என்பது உண்மை.பத்திரப் பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைதானதைத் தொடர்ந்து, கோவை பத்திரப்பதிவு சார் -- பதிவாளர் நான்சி நித்யா கரோலின் கார் டிக்கியில் இருந்து, 13 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு வாரவசூலே இவ்வளவு எனில், பதவி ஏற்ற நாள் முதல் எவ்வளவு சம்பாதித்திருப்பார் பாருங்கள்!ஒரு சார்- - பதிவாளரேஇவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்றால், இவரின் உயர் அதிகாரிகளான மாவட்ட சார் - பதிவாளர்கள் மற்றும் பத்திரப் பதிவு டி.ஐ.ஜி.,க் கள் எவ்வளவு சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பர் என்பதைநினைத்தால், தலைசுற்றுகிறது.இவர்கள் யாருமே,தங்கள் மீது தொடுக்கப்படும் லஞ்ச வழக்குகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. வழக்கறிஞர்கள் வாயிலாக சட்டத்தில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.அப்படியே சிறை சென்றாலும், ஜாமின் வாங்கி வெளியே வருகின்றனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க அரசும் காத்திருக்கிறது.இதையெல்லாம் தடுக்க என்னதான் தீர்வு கொண்டு வரப் போகிறோமோ, தெரியவில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

S.jayaram
அக் 23, 2024 20:34

தமிழ் நாட்டில் இன்னும் தமிழர்கள் என்ற உணர்வு பெருகவில்லை அதனால் தான் மாற்று மொழிக்காரர்கள் இங்கே முதல்வராகிறார்கள். வேறெந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை, கல்கத்தாவும் ஒரு ஆங்கில பிரதேசம் அதில் ஒடிசா, பீகார், மற்றும் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது ஆனால் அவைகள் எல்லாம் மொழிவாரி மாநிலம் பிரிந்த பின்னரும் மேற்குவங்கம் மட்டும் தனி மாநிலமாக ஆனது ஆனால் அங்கே மேற்குவங்கத்தை சேர்ந்த வங்கமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆளுகின்றனர், ஆனால் இங்கோ யார்யாரோ ஆளுகின்றனர அது மாறவேண்டும் என்றால் தமிழர்கள் இன்னும் அதிக உணர்வு பெறவேண்டும்


raja
அக் 22, 2024 20:30

தமிழன் வேறு திராவிடன் வேறு என்று தமிழர்கள் உணர தொடங்கி விட்டார்கள்... தமிழனை ஏமாற்ற தெலுங்கர் அண்ணாதுரை கன்னடர் ராமசாமி நாயக்கர் ஆகியோரால் உருவாக்க பட்ட சொல் தான் திராவிடன் திராவிடம் என்று அறிந்து கொண்டார்கள்... இனி திராவிட என்று வரும் கட்சிகளுக்கு வாக்குகள் இல்லை. இனி திராவிடர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவார்கள் ..


D.Ambujavalli
அக் 22, 2024 18:48

மனோன்மணீயம் சுந்தரனாரின் 'original ' பாடலை தங்கள் வசதிக்கேற்ப கூட்டிக்குறைத்து பாடும் உள்ளடி வேலையை கருணாநிதி ஆரம்பித்து வைத்தார் அந்த அசல் பாடலே இனி தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாட வேண்டும் என்று வந்தால் இவர்களின் வேஷம் முற்றுமாகக் கலைந்துவிடும்


என்றும் இந்தியன்
அக் 22, 2024 17:54

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே" இதுதானே முதன் முதலில் இயற்ற பட்ட பாடலின் வரிகள்.


Ramamurthy N
அக் 22, 2024 17:52

திரு ஆரூரான் திருவாரூரிலிருந்து புலம்புகிறார். சென்னைக்கு ஒருதரம் வந்து பாருங்கள், எவ்வளவு தூரத்திற்கு ஸ்டார்ம் வாட்டர் டிரெயினேஜ் போட்டுள்ளார்கள் என்று பாருங்கள். குழிகளை எண்ணிப்பாருங்கள். ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் குழிதோண்ட முடியுமா? 4000 கோடியில் கண்டிப்பாக400 கோடியாவது செலவழித்திருப்பார்கள். அதேபோல் சென்னையிலிருந்து பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஒருதடவை பிரயாணம் செய்யுங்கள். அவ்வளவு டோல் வாங்கியும் சாலை படுகேவலமாக உள்ளது. இதில் யாரை குறை சொல்வது?


kantharvan
அக் 23, 2024 16:44

அந்த ம....ரான் பதில் சொல்ல மாட்டான் ?? அவனுக்கே நல்லா தெரியும் ஆனால் மத போதை அவனை தெளிய விடாது.


என்றும் இந்தியன்
அக் 22, 2024 17:49

"தமிழ்மொழியைக்காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள் ஆம் அவர்கள் தமிழர்கள் ஓங்கோல் தெலுங்கர்கள் அல்ல தானே


Narayanan Sa
அக் 22, 2024 17:05

கவர்னர் ரவி அவர்களே நீங்கள் வந்த முக்கியமான வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டு தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர விடியலை கொடுத்து விட்டு சென்றால் தமிழ் மக்கள் என்றும் உங்களை மறக்க மாட்டார்கள் நன்றி ஜெயஹிந்த்


kantharvan
அக் 23, 2024 22:07

தோல்விகரமாக கிளம்புறான்


kantharvan
அக் 22, 2024 13:04

இது ஆர் எஸ் எஸ் ஊட்டிய போதை கிளி ..தெளிந்தபின் பேசலாமே?


Narayanan Sa
அக் 22, 2024 12:54

தமிழ் தாய் வாழ்த்து பாட்டு போட்டிக்கு வர நாங்கள் தயார் என்று எந்த அரசியல் வாதியோ அல்லது நம் முதல்வரோ தோள் தட்டி கொண்டு வருவார்களா. வரமாட்டார்கள். நம்ம அரசியல் வாதிகள் பலர் பட்டம் பெற்று இருந்தாலும் அந்த பட்டங்கள் எல்லாம் லஞ்சம் கொடுத்து வாங்கியவை. அதனால் யாரும் உடன் பாட மாட்டார்கள். ஆனால் தமிழ் எங்கள் உயிர் என்று மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். எல்லாம். வெட்டி முண்டம் வீனா போன தண்டம்


Elanthirai R
அக் 22, 2024 12:17

ஒன்றிய அரசின் ஊழல்களை பற்றி வாய் திறப்பதில்லை