வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திமுக வின் ஹிந்தி எதிர்ப்பு கபட நாடகம் தான் எல்லோருக்கும் தெரிந்த கதை. திரும்பத்திருப்ப புளித்த மாவை அரைப்பது tine waste ...
சிம்பிள் ஆ அங்கிள் ன்னு சொல்லுங்க நம்ம முதல்வர் பாணியில்
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திலிருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகையில் ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் எழுதப்பட்டு இருந்தனவாம்... உடனே, ‘தமிழகத்தின் இரு மொழி கொள்கைக்கு இது எதிரானது’ என்று கூறி, இங்குள்ள தமிழ் போராளிகள் கொதித்து எழுந்து விட்டனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்கின்றனரே... அது இவர்களது லாப மொழிக் கொள்கைக்கு உடந்தையானது போலும்! அதிலும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஏதோ தங்கள் சொத்தே கொள்ளை போய்விட்டது போல், ‘குய் யோ முறையோ’ என்று கூவி உள்ளனர். இவர்கள் கூவலைக் கண்டு, எங்கே தங்களது தமிழ் மொழிப் பற்று கேள்விக்குறியாகி விடுமோ என்று பயந்து, தமிழக வெற்றிக் கழக அரசு, வழிகாட்டி பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்துள்ளது. அதுமட்டுமா... மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் என இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. ஒரு சாதாரண பெயர் பலகையில் ஹிந்தி இடம் பெறக் கூடாது என்று கூக்குரல் இடும் அன்புமணி, தன் மகள்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள் என்ன தெரியு மா... சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா! என்னே... அன்புமணியின் தமிழ் மொழிப்பற்று! உதயசூரியன் என்ற சமஸ்கிருத பெயரில் கட்சி இலச்சினை வைத்துள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவர் மகன் உதயநிதியின் பெயர்கள் எல்லாம் அக்மார்க் தமிழ் பெயர்கள் அல்லவா... அதனால், தமிழ் மொழிப் பற்று இவர்களிடம் துாக்கலாகத் தான் இருக்கும்; அதுவும் உதயநிதியின் மகள் பெயர் என்ன தெரியுமா... தன்மயா! ‘சமஸ்கிருதம் செத்த மொழி’ என்று கூறியவர், தன் மகளுக்கு வைத்திருப்பதோ அந்த செத்த மொழியின் பெயரைத் தான்! ‘ஊருக்குத் தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லையடா ஆண்டி’ என்பது போல் உள்ளது, இவர்களின் தமிழ் மொழிப் பற்று! lll
திமுக வின் ஹிந்தி எதிர்ப்பு கபட நாடகம் தான் எல்லோருக்கும் தெரிந்த கதை. திரும்பத்திருப்ப புளித்த மாவை அரைப்பது tine waste ...
சிம்பிள் ஆ அங்கிள் ன்னு சொல்லுங்க நம்ம முதல்வர் பாணியில்