உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: அக். 14

இது உங்கள் இடம்: அக். 14

என்னே... ஒரு மதச்சார்பின்மை!

கு.காந்திராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘பிளை துபாய்’ விமானத்தில் நிகழவிருந்த பயங்கரவாத சதிச் செயல், இந்திய விமானி ஸ்மிட் மச்சாரால் தவிர்க்கப்பட்டுள்ளது. துணை விமானியால் கடுமையாக தாக்கப்பட்டபோதும், சமயோசிதமாக செயல்பட்டு விமானத்தின், ‘காக்பிட்’ கதவுகளை திறந்து, பயணியர் உள்ளே வர வழிசெய்தார், ஸ்மிட் மச்சார். இதனால், விமானம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நல்லபடியாக தரை இறக்கப்பட்டது; நிகழவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. இந்திய பைலட்டின் இந்த அசாத்திய துணிச்சலால், 174 பயணியரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாட்டின் தலைவர்களும் ஸ்மிட் மச்சாரை புகழ்ந்து பாராட்டியுள்ளனர். ஆனால், நம் நாட்டிலோ, பா.ஜ., தவிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வாயை இறுக முடிக் கொண்டுள்ளன. காரணம், பயங்கரவாத செயலில் ஈடுபட்டு, 174 பயணியரை கொல்ல முயற்சித்த துணை பைலட் ஒரு முஸ்லிம்; உயிரையும் துச்சமாக மதித்து, பயணியரை காப்பாற் றிய தலை மை பைலட், ஒரு ஹிந்து! இஸ்லாமிய பைலட்டின் பயங்கரவாத செயலை கண்டித்தாலோ, பயங்கரவாத செயலை தடுத்து நிறுத்திய இந்திய பைலட்டை பாராட்டினாலோ, இக்கட்சிகளின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆபத்து வந்துவிடும்; அப்புறம், தேர்தலில் இக்கட்சிகளுக்கு இஸ்லாமியர்கள் ஓட்டு போட மாட்டார்கள் அல்லவா! அதனால், காது இருந்தும் கேட்கும் திறனில்லாமல், வாய் இருந்தும் வாழ்த்த மனம் இல்லாமல் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பின்மை என்பது, ‘பயங்கரவாதமும் பாராட்டுக்குரியதே!’ என்ற புதிய கொள்கையை முன்னெடுத்துள்ளன. இதிலிருந்து, ஆட்சி எவர் கைகளில் இருந்தால், நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதை, மக்களுக்கு இக்கட்சிகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன! lll மக்களின் நம்பிக்கையே முக்கியமானது! சே.மணிகண்டன், பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரம், தற்போது, முக்கிய அரசியல் விவாதமாகியுள்ளது. ‘இண்டி’ கூட்டணி எம்.பி.,க்கள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டில்லியில் போராட்டம் நடத்துகின்றனர். வாக்காளர் பட்டியலை சீரமைத்து தகுதியற்ற பதிவுகளை நீக்குவது தேர்தல் நிர்வாகத்தின் பணி; அதேநேரம், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படக்கூடாது என்பதும் முக்கியமானது. எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றஞ்சாட்டுகின்றன. ஆளும் பா.ஜ., அரசோ, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களை, அரசியல் மோதலுக்குள் இழுக்கக் கூடாது என்கிறது. மேலும், தேர்தல் ஆணையத்தை சந்திப்பது தொடர்பாகவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குழுவாக சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் முன்வைக்கப்பட்ட இடம் வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப இல்லாததால், அந்தக் கோரிக்கையை ஏற்க முடியவில்லை என்றும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இச்சூழலில் அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதைக் காட்டிலும், எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு, ஆவணங்கள் மற்றும் நடைமுறை விளக்கங்களுடன் பதிலளிப்பதே முக்கியம்! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்துவது அல்லது நீக்குவது போன்ற நடைமுறைகள் பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் விளக்கப்பட வேண்டும். தேர்தல் என்பது வெறும் அரசியல் கட்சிகளின் போட்டியல்ல; அது, ஒவ்வொரு குடிமகனின் ஓட்டுரிமையையும் பாதுகாக்கும் ஜனநாயக நடைமுறை. எனவே, தேர்தல் தொடர்பான எந்த விவகாரத்திலும் அரசியல் குற்றச்சாட்டுகளைத் தாண்டி உண்மை, ஆதாரம், வெளிப்படைத்தன்மை ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட வேண் டும். தேர்தல் முடிவை விட, அந்த முடிவு நியாயமான முறையில் உருவானது என்ற மக்களின் நம்பிக்கையே முக்கியமானது!

lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை