உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சபாஷ்... சரியான நடவடிக்கை!

சபாஷ்... சரியான நடவடிக்கை!

-ரா.சேது ராமானுஜம், விருதுநகரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --'நான் ஒரு ரூபாய் கூட திருடியதில்லை' - இப்படிச் சொன்னவர், மஹாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ, அப்துல் கலாமோ அல்ல; பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி, மோசடி செய்து, வெளிநாட்டிற்கு தப்பியோடிய, தொழிலதிபர் விஜய் மல்லையா தான் இப்படி கூறியுள்ளார். இவர், தான் நடத்தி வந்த கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக, பொதுத்துறை வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், 2016ல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடி விட்டார். கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கவே, அவரின் சொத்துக்களை முடக்கி விற்று, 14,130 கோடி ரூபாயை, அவர் கடன் பெற்ற வங்கிகளிடம் அரசு ஒப்படைத்து விட்டது. இதுகுறித்து, சமீபத்தில், பார்லிமென்டில்மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததும், 'லபோ திபோ'வென குதிக்க ஆரம்பித்து விட்டார், மல்லையா. 'நான் வாங்கிய கடனைப் போல இரு மடங்கு தொகையை வசூலித்து விட்டனர்;இதற்கு சட்டரீதியான காரணங்களை அமலாக்கத் துறையும், வங்கிகளும் தெரிவிக்க வேண்டும்' என, சமூக வலைதள பக்கத்தில் கொந்தளித்துள்ளார். நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, விஜய் மல்லையா இந்தியாவில் இருந்தபடியே சொத்துக்களை விற்று, கடனை அடைத்திருக்கலாம். அதைவிடுத்து, கோழையைப் போல் வெளிநாட்டிற்கு தப்பிஓடியது மட்டுமின்றி, கடனை கட்டாமல் இழுத்தடித்தால் சும்மா இருப்பரா? தற்போதைய பா.ஜ., அரசு, முந்தைய காங்கிரசை போல வேடிக்கை பார்க்காது; விட்டால், மல்லையாவின் வேட்டியைக் கூட உருவிவிடும்!இந்த வரிசையில், நீரவ் மோடி, ெமஹுல்சோக்சியின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன; விரைவில், அவர்களது சொத்துக்களும் விற்கப்படலாம். வங்கிகளை மோசடி செய்ய நினைக்கும்,இத்தகைய பொருளாதார குற்றவாளிகளுக்கு,மத்திய அரசு சரியான தண்டனை கொடுத்துள்ளது!

சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம் : இசை ஞானி இளையராஜாவை ஸ்ரீவில்லிப்புத்துார் அர்த்த மண்டபத்தில் அனுமதிக்காததை, ஒரு பெரிய விவாதப்பொருளாக ஆக்கியிருக்கின்றன, சில ஊடகங்கள்.கோவில்களுக்கு என்று சிலகட்டுப்பாடுகள், விதிமுறைகள்உள்ளன. கோவிலுக்கு செல்வோர் யாராக இருந்தாலும், அந்த விதி முறைகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்.கருவறைக்குள் அர்ச்சகரைத் தவிர, நாட்டைஆளும் அரசன் கூட செல்லமுடியாது கோவில்களை கட்டிய அரசர்கள் கூட, தாங்கள் கட்டிய கோவில் தானே என்று கருவறைக்குள்சென்றது கிடையாது.அர்ச்சகரே கூட ஆகம விதிகளையும், ஆச்சார நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பவராக இருந்தால் மட்டும் தான், கருவறைக்குள்செல்ல முடியும். கலெக்டர் என்பதற்காக,அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து விட முடியுமா? அதை அனுமதித்து விடுவீர்களா...அதைப் போல் தான் இதுவும்!கேரள கோவில்களில்,ஆண்கள் சட்டை அணிந்துசெல்ல அனுமதியில்லை. நாட்டை ஆளும் பிரதமர் என்றாலும், இந்த விதிமுறையை பின்பற்றினால் தான் கோவிலுக்குள் செல்லமுடியும் எனும் போது, அதன் ஆகம விதிகளை புரிந்து கொள்ள வேண்டுமேதவிர, அதைப் பற்றி விவாதம் செய்யக் கூடாது. அப்படிப் பார்த்தால், மாற்று மதத்தில் எத்தனையோமுரண்பாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் உட்கார்ந்து விவாதிப்பீர்களா... அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? ஸ்ரீவில்லிபுத்துார் கோவில்அர்த்த மண்டபம், காலம் காலமாக கருவறைக்குச் சமமாக பாவிக்கப்படுகிறது;எனவே, இளையராஜா அனுமதிக்கப்படவில்லை. இளையராஜாவே இதுகுறித்து தெளிவாக விளக்கம்கொடுத்த பின்பும், அதைப்பற்றி பேசுவது அநாகரிகமாக தெரியவில்லையா? மக்கள் உங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்!

கட்டுப்பாடு விதிக்கலாம்!

என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர்ஆலை, தமிழக அரசால்2018ல் மூடப்பட்டது.தொழில் ஆலோசகர்கள்மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்கள், ஆலையை மூடவேண்டாம் என கேட்டுக்கொண்ட போதிலும், தமிழகஅரசு தன் முடிவை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டது.ஸ்டெர்லைட் ஆலையால் பல உள்ளூர்வாசிகள்,நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். தற்போது, அவர்களின் வாழ்வாதாரம்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.ஆலையை மூடிய அரசு, அவர்களுக்கு மாற்றுவேலை வாய்ப்பை அளிக்க,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், இத்தொழிற்சாலையை நடத்திய வேதாந்தா நிறுவனம்,தற்போது, சவுதி அரேபியாவில், துவங்க முடிவு செய்துள்ளது. இதை, அந்நாட்டு அரசும் இருகரம் நீட்டி வரவேற்று உள்ளது.இங்கோ, இருந்த ஆலையை மூடிவிட்டு காப்பருக்காக வெளிநாடுகளில் கையேந்து கிறோம். ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது, நாட்டின் தேவைக்கு போக,கணிசமான காப்பரை ஏற்றுமதி செய்து பல கோடிரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டி வந்த இந்தியா, தற்போது, அவற்றை இறக்குமதி செய்கிறது.இதனால், மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் வரி வருமானத்தை இழந்துள்ளன.சில அரசியல்வாதிகளும்,போராட்டக்காரர்களும், ஸ்டெர்லைட் ஆலையில்இருந்து சல்பர் டைஆக்சைடு வாயு வெளிவந்து, சுற்றுப்புறத்திற்கு கேடு ஏற்பட்டதாகவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளிவருவதாகவும், அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் பரவுவதாகவும் கட்டுக்கதைகளை பரப்பி, மக்களை பயம் கொள்ள வைத்தனர்.அது குறித்து, ஆலை நிர்வாகம் எவ்வளவோ விளக்கியும், போராட்டக்காரர்கள் கேட்கவில்லை. விளைவு, தொழிற்சாலை மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர்.ஆலை மூடப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் துாத்துக்குடிசுற்றுப்புற சூழ்நிலையில்,எவ்வித மாற்றமும் இல்லை;மக்களின் ஆரோக்கியத்தில்எந்தவித தடுமாற்றமும் இல்லை.பசுமை தீர்ப்பாய நீதிமன்றம், 'ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம்' என்றுதீர்ப்பளித்தும், ஸ்டெர்லைட்ஆலையால் உள்ளூர்வாசிகளுக்கு பிரச்னை என்று கூறி போராட்டம் நடத்தினர்.ஆனால், இன்று, உள்ளூர்வாசிகளே ஆலையை மீண்டும் இயக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.தமிழக அரசு, நடந்து முடிந்த பல விரும்பத்தகாத சம்பவங்களை மறந்து, நன்மை பயக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை, மீண்டும் இயக்குவது குறித்துசிந்திக்க வேண்டும். அவசியம் என்றால் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sampath
டிச 25, 2024 10:38

பள்ளப்பட்டி நகராட்சி - லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி இனைய கூடாது இது எனது முதல் முயற்சி, எங்களின் சிறிய கிராமத்தை காப்பாற்றும் கட்டுரை - எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் திருத்திக்கொள்ளவும், எனது சொந்த பெயரில் வெளியிடாமல் வேறு பெயரில் வெளியிடுங்கள், நீங்கள் இந்த கட்டுரையின் கருவை அறிந்து புரிந்து திருத்தி நல்ல கட்டுரையாக வெளியிட வேண்டி கேட்டு கொள்கிறேன் . லிங்கமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து சுமார் 2000 பேர் விவசாய தொழிலை நம்பி வாழும் ஹிந்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதி. பள்ளப்பட்டி ஊராட்சி முஸ்லீம் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி அவர்கள் விவசாயம் அல்லாத மற்ற தொலழில்களை செய்து வருகின்றனர், இந்த சிறிய ஊராட்சியில் 500 கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படுகிறது இந்த ஊராட்சி மக்கள் இப்பொழுது இதை நம்பி தான் வாழ்வாதாரம் மற்றும் 100 நாள் வேலை திட்டம் நம்பி வாழும் பகுதி, இது சிறிய ஊராட்சி என்பதால் வரியும் கம்மி மக்கள் நிம்மதியாக வாழும் பகுதி, பள்ளப்பட்டி நகராட்சி 20000 மக்கள் வசிக்கும் பகுதி அவரக்ளின் நகராட்சி நிதி பற்றாக்குறை காரணமாக அவர்கள் இப்பொழுது லிங்கமநாயக்கன்பட்டியை இணைக்க தீர்மானம் ஏற்றி வருகின்றனர். ஊராட்சி மக்கள் பல்வேறு கிராம சபை கூட்டத்தில் இனைய கூடாது என்று தீர்மானம் ஏற்றி அரசிற்கு அனுப்பி வைத்துள்ளனர். நகராட்சி உடன் இணைத்தால் பல மடங்கு வரி ஏற்றப்படும், மக்களின் வருமானம் சொற்பமே இப்பொழுது இணைத்தால் பல மடங்கு வரி ஏறி மக்கள் நிலை மோசம் ஆகும். இது முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் மூலமாக லிங்கமநாயக்கன் பட்டி சுற்றி உள்ள கிராமங்களின் நிலத்தை அதிக விலையை ஏற்றி மக்களை கஷ்டத்தில் கொண்டு சொல்ல போடும் சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டி உள்ளது . பள்ளப்பட்டி மக்களின் குப்பை கிடங்கை லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நிலத்தில் கொண்டு வர அவர்களுக்கு திட்டம் என்பதையும் செய்தி மூலம் அறிந்தேன், இது கேரளா தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் கொண்டு வந்து குப்பை கொட்டியதற்க்கு சமம் , தூய்மையான கிராமத்தை குப்பை கிராமமாக மாற்ற வழிவகுக்கும். இரவு நேரங்களில் ஒரு சில நேரங்களில் குப்பையை வந்து கொட்டி விட்டு செல்கின்றனர் அதறகு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மூன்று தடவை பள்ளப்பட்டி நகராட்சி குப்பையை எடுத்து சென்றுள்ளது, வரும் காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரமால் இருக்கவும் , இரு சமுதாய மக்கள் எப்பொழுதும் போல் ஒற்றுமையுடன் இருக்க லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்காமல் இருபது ஒரு சிறந்த முடிவாக கருத படுகிறது . இரு சமுதாய மக்களின் வழிபாடு , வாழ்வாதாரம் , வாழ்க்கை முறை , தொழில் அனைத்தும் வேறு இப்பொழுது இதை இணைத்தால் சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஊர் மக்கள் அந்த ஊரில் வாழ முடியாத நிலை ஏற்படும். லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி எப்பொழுதும் போல தன்னாட்சி அதிகாரத்துடன் இருக்க இந்த கடிதத்தை அனுப்புகின்றேன் . நன்றி வணக்கம்


veeramani
டிச 24, 2024 12:40

மய்ய அரசின் மூத்த விஞ்ஞானி கருத்து ...ஒரு நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடைய தாமிரம் காப்பர் மெட்டல் முக்கிய தேவை. வேதாந்தா குரூப் ஸ்டெரிலைட் காப்பர் அலையை நிறுவி சுமார் 6000 நபர்களுக்கு வேலைகளை நல்கியது. மேலும் சுமார் 3000 லாரிகளை வேலைகள் கொடுத்தது. ஸ்டெரிலைட் தூத்துக்குடி அருகில் உள்ள சுமார் இருபது கிராமங்களை தத்து எடுத்து மருத்துவ பரிசோதனை, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை கவனித்துகொன்டது.. தண்ணீர் வசதி ஏற்படுத்தியது. சில அரசியல்வாதிகளின் சுய லாபத்திற்காக ஸ்டெரிலைட் இழுத்து மூடப்பட்டது. இதனால் தூத்துக்குடி மக்களின் துயரம் வெளிச்சொல்ல இயலாது. தென் தமிழ்நாடு... என்றும் கவனிக்கப்படுவதில்லை .


shyamnats
டிச 24, 2024 11:37

இதற்கு தவறான உள் நோக்கங்கள் காரணமாக இருந்தன. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. அதனை சரியான தொழில் நுட்ப வல்லுனர்களிடம் அணுகினால் தீர்ந்துவிடும். இப்போது அந்த ஆலையை மூடியதால் தூத்துக்குடி மக்களின் பொது ஆரோக்கியம் மேம்பட்டு விட்டதாக கூறமுடியாது. வட்டார பொருளாதார வளர்ச்சி கண்கூடாக பாதிக்க பட்டதுதான் கண்கூடு. முக்கியமாக முன் வைக்கப்பட்ட கான்சர் போன்ற வியாதிகள் வேறு இடங்களில் இதைவிட அதிகமாகவே காணப்படுகிறது. தக்க தீர்வுகளுடன், மக்கள், மாநில, தேசிய நலனை கருத்தில் கொண்டு விரைவில் ஆலை செயல்படுவதற்கு அனுமதிக்க படவேண்டும்.


Dharmavaan
டிச 24, 2024 08:31

ஸ்டெர்லிட் ஆலையை மூட உச்ச நீதி எப்படி ஒத்துக்கொண்டது பொது அறிவு கூட இல்லாமல். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு பற்றிய அறிவில்லாமல் .. உலகம் முழுதும் செப்பு ஆலைகள் நடத்தப்படவில்லையா .. அதற்கு ஏற்ற பாதுகாப்பு முறைகளை கையாண்டால் நடத்தலாம் என்பது மூடனுக்கு புரியும். இதற்கு காரணம் சீன கைக்கூலிகள் போராட்டம் சுடாலின் அரசும் சீன கைக்கூலியே. இதன் ஆட்சேபனை ஏற்று உச்ச நீதி தீர்ப்பு தேச விரோதம்


RAMAKRISHNAN NATESAN
டிச 24, 2024 10:25

நீதிமன்றம் இடதுசாரி ஆதரவு நீதிபதிகளை உள்ளடக்கியது.. நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் கூட விளக்கியது .... ஆலை வேண்டாம் என்று கூறிய மக்களே மீண்டும் ஆலை இங்கே தேவை என்று இப்போது வேண்டுகோள் விடுப்பது வினோதம். தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாட்டு விதிகளை விதித்து நடத்த அனுமதிக்கலாம் .... விதிகளை உருவாக்க மத்திய மாநில அரசுகளிடம் திறமைவாய்ந்த அதிகாரிகளோ, பொறியாளர்களோ இல்லை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை