ஜூலை 25, 2011மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில், 'தமிழ் நேசன்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த, கரூர் மாவட்டம், வாங்கல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட, பைரோஜி சீனிவாசனின் மகனாக, 1942, மார்ச் 30ல் பிறந்தவர், ரவிச்சந்திரன் எனும் ராமன்.இவர், கோலாலம்பூர் தமிழ்ச்சங்க பள்ளியில் படித்தார். இவர் தந்தை, தாயகம் திரும்பி திருச்சியில் குடியேறினார். இவர், அங்குள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் படித்து, சென்னையில் மருத்துவம் படிக்க வந்தபோது, இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. அவர், இவரை, காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகனாக்கினார். தொடர்ந்து, இதயக்கமலம், குமரிப்பெண், அதே கண்கள்,கவுரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முன்னணி கதாநாயகனாக நடித்து பின் குணச்சித்திரம், வில்லன் வேடங்களிலும் நடித்தார். மானசீக காதல், மந்திரன் உள்ளிட்ட ஏழு படங்களை இயக்கியுள்ளார்.டாக்டராக வந்து ஆக்டரான இவர், 2011ல் தன்69வது வயதில், இதே நாளில் மறைந்தார். 1970களின், 'ரொமான்டிக் ஹீரோ' மறைந்த தினம் இன்று!