உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

அக்டோபர் 10, 2016திருச்சியை பூர்வீகமாக கொண்ட ரெங்கசாமி - சிந்தாமணி தம்பதியின் மகனாக, மலேஷியாவின் கெடா மாநிலத்தில் உள்ள பீடோங் நகரில்,1940, ஆகஸ்ட் 24ல் பிறந்தவர் கார்த்திகேசு. இவர், சைனீஸ் தோட்டத் தமிழ் பள்ளி, ஆர்வார்ட் தோட்ட தமிழ் பள்ளிகளில் படித்தார். ஆங்கில இடைநிலைக் கல்வி கற்ற பின், கொலம்பியா பல்கலையில் இதழியலில் முதுகலை பட்டம், பிரிட்டனில் தகவல் சாதன துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். மலேஷிய வானொலி ஒலிபரப்பாளர், மலேஷிய அறிவியல் பல்கலை பேராசிரியர் பணிகளை செய்தார்.அங்கு வெளியான, 'தமிழ் முரசு' இதழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். 'இலக்கிய வட்டம்' எனும் சிற்றிதழை துவக்கி, மலேஷியாவில் பல எழுத்தாளர்களை வளர்த்தார். இந்தியாவில் இருந்து வெளியான, 'தீபம், கணையாழி, கல்கி' உள்ளிட்ட இதழ்களிலும் எழுதினார்.தமிழ், ஆங்கிலம், மலாய் மொழி படைப்பாளியான இவர், சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் மலேஷிய நிர்வாகியாக செயல்பட்டார். 'மலேஷிய தொலைக்காட்சியின் வரலாறு' என்ற ஆய்வு நுாலை எழுதிய இவர், 2016ல் தன் 76வது வயதில், இதே நாளில் மறைந்தார். மலேஷிய மண்ணில் தமிழ் மணக்க செய்த எழுத்தாளர், 'ரெகா' மறைந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி