உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

நவம்பர் 8, 1912பிரபல தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்கார் - லட்சுமி தம்பதியின் மகனாக, மதுரையில், 1912ல் இதே நாளில் பிறந்தவர் டி.எஸ்.சந்தானம்.இவர், மதுரையில் படித்து, தன் தந்தையிடம் வர்த்தகத்தை கற்றார். 1936ல் சென்னைக்கு வந்த இவர்,டி.வி.எஸ்., அண்டு சன்ஸ் நிறுவனத்தில் பல்வேறுபதவிகளை வகித்தார். சாலை போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், ஆட்டோ மொபைல், வாகன உதிரிபாக தயாரிப்பு, பொது காப்பீடு, வங்கி மற்றும் நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் புதுமைகளை புகுத்தினார்.கடந்த 1954ல் சுந்தரம் பைனான்ஸ், மெட்ராஸ்மோட்டார்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களை துவக்கினார். வாகன உதிரிபாகதயாரிப்புக்காக, வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா,சுந்தரம் கிளேட்டன், லுாகாஸ் டி.வி.எஸ்., உள்ளிட்டநிறுவனங்களை துவக்கி, நாடு முழுதும் உதிரிபாகங்களை வினியோகம் செய்தார்.'இந்தியாவின் டெட்ராய்டு' என்ற பெருமை, தமிழகத்துக்கு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தஇவர், 2005, ஏப்ரல் 15ல் தன் 93வது வயதில் மறைந்தார். தரமே நிரந்தரம் என்பதை செயலில் காட்டிய தொழிலதிபர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை