இதே நாளில் அன்று
நவம்பர் 30, 1904கேரள மாநிலம், எல்லப்பள்ளி என்றஊரில், துரைசாமி - மீனாட்சியம்மாள்தம்பதியின் மகனாக, 1904ல் இதே நாளில் பிறந்தவர் சுப்பிரமணியன் யோகி.இளம் வயதிலேயே தந்தையைஇழந்ததால், இவரது குடும்பம்,சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு குடியேறியது. சங்ககிரி துவக்கப்பள்ளி, ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளிகளில் படித்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் அறிந்தவர், தன் 9வது வயதில், 'பாலபாரதி' பட்டம் பெற்றார். ஊட்டி காவல் துறை அலுவலகத்தில் பணியாற்றினார்.காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, வேலையை உதறி, உப்பு சத்தியாகிரகம், வைக்கம் போராட்டம், ஈரோடு மறியல் ஆகிய போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்றார்.'தேசபக்தி கீதம், தமிழ்க்குமரி' உள்ளிட்ட நுால்களை எழுதியுள்ளார். இரு சகோதரர்கள், பக்த அருணகிரி, லட்சுமி உள்ளிட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி, இயக்கிய இவர், 1963, ஜூலை 27ல் தன் 59வது வயதில் மறைந்தார்.சிறந்த திரைப்பட வசனகர்த்தாவுக்கான தங்கப்பதக்கம் வென்ற, 'எஸ்.டி.எஸ்.யோகி' பிறந்த தினம் இன்று!