மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
டிசம்பர் 20, 2019திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் கிராமத்தில், டேனியல் - ஞானம்மாள்தம்பதியின் மகனாக, 1938 ஜனவரி 14ல் பிறந்தவர் செல்வராஜ்.இவரது தந்தை, கேரளாவில் தேயிலை தோட்ட கங்காணியாகபணியாற்றியதால், இவரும் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு பள்ளிகளில்பயின்றார். பின், நெல்லை ம.தி.தா., இந்து கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம், சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டம் படித்து, வழக்கறிஞராகபணியாற்றினார்.தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை உள்ளிட்டோருடன் பழகி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.'ஜனசக்தி, தாமரை' உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். இவரின், 'மலரும் சருகும், முத்திரை மரக்கால், தேநீர்' உள்ளிட்ட படைப்புகள் சிறப்பானவை. 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய,'தோல்' நாவலுக்கு, 2012ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவர், 2019ம் ஆண்டு இதே நாளில், தன் 81வது வயதில்மறைந்தார்.இவரது நினைவு தினம் இன்று!
03-Dec-2024