இதே நாளில் அன்று
மார்ச் 31: திருநெல்வேலியில், 1904, ஜூலை 22ல், முத்தையா தொண்டைமான் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், பாஸ்கர தொண்டைமான். சைவ தொண்டாற்றிய தமிழறிஞர் குடும்பத்தில் பிறந்த இவர், திருநெல்வேலி ஹிந்து கல் லுாரியில் இளங்கலை பட்டம் பெற்று, வனத்துறை மற்றும் வருவாய் துறையில் பணியாற்றினார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, வேலுார் கலெக்டராகி ஓய்வு பெற்றார். ப ணி ஓய்வுக்கு பின், தமிழக கோவில்களின் கலை, சிற்பம், கட்டடக்கலை, பண்பாட்டு தொடர்புகளை, கல்கி இதழில், 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற ஆன்மிகத் தொடராக எழுதினார். 'கல்லும் சொல்லாதோ கவி, தமிழர் கோவில் களும் பண்பாடும், கம்பன் கண்ட ராமன்' உள்ளிட்ட நுால்களை எழுதினார்; அவை, நாட்டுடைமை ஆக்கப்பட்டன. மறைந்த காஞ்சி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், இவருக்கு, 'கலாமணி' பட்டம் வழங்கினார். இவர், தன் 60வது வயதில், 1965ல் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!