மேலும் செய்திகள்
பாட்டு கேட்ட 'பாடும் நிலா'
15-Mar-2026
ஏப்ரல் 1: கேரள மாநிலம், பாலக்காட்டில், வயலின் வித்வான் விஸ்வநாத பாகவதர் - முத்துலட்சுமி தம்பதியின் மகனாக, 1923, நவம்பர் 15ல் பிறந்தவர், கொல்லெங்கொட விஸ்வநாத நாராயணசுவாமி எனும் கே.வி.நாராயணசாமி. இவரது தாத்தா, கொள்ளு தாத்தா உள்ளிட்டோர், 'கிருஷ்ணன் ஆட்டம்' எனும் பாரம்பரிய கலை பாடகர்களாக இருந்ததால், அவர்களிடம் இசை கற்க துவங்கினார். ஏழாம் வகுப்புடன் படிப்பை கைவிட்டு, மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யர் மற்றும் சி.எஸ்.கிருஷ்ண அய்யரிடம் இசை நுணுக்கங்களை கற்றார். பின், சென்னை வந்து, பாப்பா கே.எஸ்.வெங்கட ராமையாவிடம் இசை கற்றார். தொடர்ந்து, அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம் குருகுல முறையில் இசை பயிற்சி பெற்று, அவரது பாணியிலேயே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், 60 ஆண்டுகள் கச்சேரிகள் செய்தார். சென்னை மத்திய இசை கல்லுாரியின் முதல்வர், அமெரிக்காவின் வெஸ்லியன் பல்கலையில் இசை ஆசிரியர் பொறுப்புகளை வகித்தார். 'பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாநிதி, நாத பிரம்மம்' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 78வது வயதில், 2002ல் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!
15-Mar-2026