| ADDED : ஆக 30, 2024 09:28 PM
கோவையில், 145 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை சட்டசபை உறுதிமொழி குழு தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன், மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் ஆய்வு செய்தனர்.அப்போது, 'பணி துவங்கியது எப்போது; என்ன நிறுவன சிமென்ட், கம்பி பயன்படுத்தப்படுகிறது' என, வேல்முருகன் விசாரித்தார். அப்போது,'கட்டுமான பணிக்கு செங்கல் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது; ஆனால், இங்கு, 'பிளை ஆஷ்' கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதே...' என, கேட்டார்.கலெக்டர், 'பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி, செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. செங்கலுக்கு மாற்றாக பிளை ஆஷ் கற்கள் பயன்படுத்தப்படுகிறது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இவ்ளோ கேள்வி கேட்கிறவருக்கு, செங்கலுக்கு மாற்று, பிளை ஆஷ் என்ற சாதாரண விபரம் கூட தெரியலையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.