உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தனி ஈழம் அமைக்கலாமே!

தனி ஈழம் அமைக்கலாமே!

புதுக்கோட்டையில் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த பிரீமியர் - 2024 கிரிக்கெட் போட்டியை, திருச்சி தொகுதி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டதும், இலங்கை போர் காலத்தில் முள்ளிவாய்க்காலில் 1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததும் வரலாற்று பிழை. 'உலகத்தின் பல நாடுகளில் இதுபோன்று கருத்து வேறுபாடு வரும் போது, சிறுசிறு தனி நாடுகளாக பிரிப்பது வழக்கம். இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிப்பதற்கு உலக நாடுகளும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஒருவேளை மத்தியில் இவங்க கட்சி தலைமையில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், தனி ஈழம் அமைக்கலாமே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதிப்பது போல தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
மே 23, 2024 10:31

பல கட்சி ஜூம்பலிங்கம் எந்த நாட்டையும் பிரிக்கும் விதமாக பேசுவது அரசியல்வாதிகளினுக்கு நல்லதல்ல செறிலங்கா நாட்டை பற்றி பேசவேண்டாமே இந்தியாவில் வே ட்டப்பட்ட கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன


D.Ambujavalli
மே 23, 2024 06:47

உள்நாட்டுப் பிரசினைகள் ஆயிரம் கிடைக்க, ஒரு கிரிக்கெட் துவக்க விழாவில் இந்தப் பேச்சு தேவை தானா?


சமீபத்திய செய்தி