உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே!

பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே!

தி.மு.க., ஆட்சி குறித்து, அ.தி.மு.க.,வின், ஜெ., பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.மதுரை, முனிச்சாலையில் முதல் திண்ணை பிரசாரத்தை, பேரவையின் மாநில செயலரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு துவக்கி வைத்தனர். அப்பகுதி பூக்கடைகள், டீ கடைகள், ஹோட்டல்களில், 'நோட்டீஸ்' கொடுத்தபடியே வந்தவர்கள், பரோட்டா கடையை பார்த்ததும் நின்றனர்.'சுடச்சுட வாங்கித் தரப் போகின்றனரோ' என, கூடவே வந்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, உதயகுமார் திடீரென மாஸ்டராகி, பரோட்டா சுட ஆரம்பித்து விட்டார். பரோட்டாவை திருப்பி போட்டவர், 'இப்படி தாங்க, தி.மு.க., ஆட்சியையும் திருப்பிப் போட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வரணும்' என்றார். இதை அருகில் இருந்த செல்லுார் ராஜுவும் ஆமோதித்தார். மூத்த நிருபர் ஒருவர், 'மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வர மாஸ்டர் பிளான் போடுவாங்கன்னு பார்த்தா, இப்படி பரோட்டா மாஸ்டர் ஆகிட்டாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, அந்த ஏரியாவே கலகலப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 24, 2025 06:18

அதாவது ‘இன்று நீ, நாளை நான்’ என்று திருப்பித் திருப்பி எங்களையே உட்கார வையுங்கள், மாறி மாறி கொள்ளையடித்து, மாநிலத்தை சூறையாடுகிறோம். மற்றபடி நல்லது எதுவும் நடக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள் என்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை