உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  குதிரை பேரத்துக்கு எடுத்துக்காட்டு!

 குதிரை பேரத்துக்கு எடுத்துக்காட்டு!

தி.மு.க., முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ரகுபதி, புதுக்கோட்டையில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'குளம் வற்றி போனால், பறவைகள் அடுத்த குளத்தை தேடிப் போவது வழக்கம். ஆனால், குளத்தையே வற்ற செய்துவிட்டு, இன்றைக்கு பறவைகள் அடுத்த குளத்தை தேடிப் போகும் அபூர்வத்தை பார்க்கிறோம். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆளுங்கட்சிக்கு ஓடுவதை கண்டு, இன்று தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது. ஏன், இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் அவர்களால் பொறுத்திருக்க முடியாதா? 'ம.தி.மு.க.,வின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்; அவர்களை நான் வெற்றி பெற செய்கிறேன்' என்று முதல்வர் விஜய் சொன்னதாக வைகோ வெளிப்படையாக கூறியதே, குதிரை பேரத்துக்கு எடுத்துக்காட்டு' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'கட்சி தாவியதை விமர்சிக்கும் இவரே, அ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்து தி.மு.க.,வுக்கு வந்தவர் தானே' என கூற, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 08, 2026 23:03

தானே. கட்சி. மாறி. வந்தவர். என்பதை. மறந்துவிட்டு, இன்று. பலரும். மந்தை, மந்தையாக. ஓடுவதைக். கண்டு. மஹா. உத்தமர். போலப் பேசுகிறாரே, இன்னும் தான். போக. முடியவில்லையே. என்ற. ஆதங்கம். போல். இருக்கிறது


Mohan
ஜூலை 08, 2026 20:04

பர்ஸ்ட் இவரை விசாரநை வலயத்துக்குள்ள கொண்டு வரணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை