உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பதிலடியா குறை சொல்றாரோ?

 பதிலடியா குறை சொல்றாரோ?

காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யான கிறிஸ்டோபர் திலக், சமீபத்தில் தன் சொந்த ஊரான திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், 'தமிழக சட்டசபையில் கூட்டணி கட்சிகள், பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை முன்வைக்கும் போது, அவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்து, உரிய விளக்கம் அளிப்பது அரசுக்கு நல்லது. முதல்வரை மகிழ்விப்பதற்காக தமிழக அமைச்சர்கள் பேசுவது தேவையற்றது. 'தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள், மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில், அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'விஜயை பிரதமர் வேட்பாளர்னு, அவரது கட்சியினர் சொல்றதுக்கு பதிலடியா, த.வெ.க., அரசு மீது குறை சொல்றாரோ?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 31, 2026 17:04

'முதலில். மாநில. ஆட்சியில். கோழி. பிடித்துக். காட்டட்டும்' அப்புறம். டில்லிக்கனவு. காணட்டும் கொம்பு சீவு வர்கள். யாரும். மக்கள். பிரசனையை. பார்க்க. மாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை