உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சாமர்த்தியமான அதிகாரிகள்!

சாமர்த்தியமான அதிகாரிகள்!

தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழா துவக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை பள்ளி மாணவியர் சிலர் பாடினர்; பாடலில் உள்ள வார்த்தை களை சரியாக உச்சரிக்காமல் தவறாக உச்சரித்தனர். இதையறிந்து உஷாரான கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், துணை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்தை தவறில்லாமல் கோரசாக உரக்க பாடினர். தங்கள் தவறை உணர்ந்த மாணவியரும், தங்கள் குரலின் சத்தத்தை குறைத்துக் கொண்டனர். அதிகாரிகள் உரக்க பாடி, பாடலை நிறைவு செய்தனர். பார்வையாளராக இருந்த துாய்மை பணியாளர் ஒருவர், 'மாணவியர் மனசு நோகாம, அதிகாரிகள் சாமர்த்தியமா பாடி சமாளிச்சுட்டாங்க பா...' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஆக 28, 2025 23:29

நல்லவேளை இந்த கூட்டத்தில் பாடல் தெரியாத மந்திரிகள் யாருமில்லை.


Arul Narayanan
ஆக 28, 2025 19:52

நல்ல வேளை அவர்களுக்கு எல்லாம் சரியாக பாடத் தெரிந்து இருக்கிறது.


D.Ambujavalli
ஆக 28, 2025 16:58

பள்ளிப்பிள்ளைகள் தவறு செய்தாலும், அதை பெரிது படுத்தாமல் சமாளித்தது நல்ல நாகரிகம்


சமீபத்திய செய்தி