‘பழனிசாமி வரலாறை மறந்துட்டாரோ?’
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் சமீபத்தில் மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார், அரசியல் அநாகரிகமாக தரம் தாழ்ந்து பேசி வருகிறார்; குறிப்பாக, எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி குறித்து நாலாந்தரமாக பேசி வருகிறார். பழனிசாமியின் அனுபவம் என்ன; நிர்மல்குமாரின் அனுபவம் என்ன? ‘நீங்க எத்தனை கட்சிக்கு போனீங்க... பழனிசாமி காலில் எத்தனை தடவை விழுந்தீங்க... எத்தனை தடவை அவரை புகழ்ந்து பேசினீங்க என்பதெல்லாம் மறந்து விட்டதா? கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில், அரசியல் நாகரிகம் கருதி, த.வெ.க.,வை பாதுகாத்தவர் பழனிசாமி. அன்று உங்களை கைவிட்டு இருந்தால், உங்க கட்சி காணாமல் போயிருக்கும்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘முதல்ல பழனிசாமி யார் கால்ல விழுந்து, முதல்வர் பதவிக்கு வந்தார் என்ற வரலாறை இவர் மறந்துட்டாரோ?’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.