உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அதிகாரம் பத்தி இவருக்கு தெரியாதா?

அதிகாரம் பத்தி இவருக்கு தெரியாதா?

மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி நிர்ணய முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.அப்போது, செல்லுார் ராஜு, 'மதுரை மாநகராட்சியில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தான் வெளிக்கொண்டு வந்தனர். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'தவறு செய்தவர்களை தண்டித்த இடம் இந்த மதுரை. அன்று தவறு செய்தவர்களுக்கு கண்ணகி தண்டனை கொடுத்தார். இன்று மாநகராட்சியில் ஊழல் செய்தவர்களை மதுரை கண்ணகியாக நீங்கள் மாறி தண்டிக்க வேண்டும்...' என்றார்.இதை கேட்ட மூத்த நிருபர், 'கமிஷனரை நடவடிக்கை எடுங்கன்னு கேட்கிறாரே... அவங்களுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்குன்னு, முன்னாள் அமைச்சரான இவருக்கு தெரியாதா...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 17, 2025 16:50

கண்ணகி அளித்த ‘தண்டனை’ இன்று கொடுக்க ஆயிரம், லட்சம் உயிர்களையும் சேர்த்து எரிக்க வேண்டும் என்கிறாரா?


முக்கிய வீடியோ