உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘நம்ம பக்கமே வர மாட்டாங்க!’

‘நம்ம பக்கமே வர மாட்டாங்க!’

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக கனிமவளத் துறை அமைச்சர் பிரபு பேசுகையில், ‘முதல்வர் விஜய் சிறந்த ஆட்சியை தர விரும்புகிறார். அதற்கு அதிகாரிகள், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு செல்வதில் அக்கறை காட்ட வேண்டும். ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சியினர் கூக்குர லிட்டு வருகின்றனர். ‘அவர்கள் எண்ணத்தை உடைக்கும் விதத்தில் அதிகாரிகள், மக்களுக்கு நேர்மையான சேவையை செய்து, முதல்வர் விஜய்க்கு நற்பெயர் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு அதிகாரிகள் பணிக்கு இடையூறாக த.வெ.க.,வினர் வந்தாலோ, அமைச்சருக்கு மச்சான், மாமன் என யார் வந்தாலும், அவர்கள் குறித்து என் அலைபேசி எண்ணுக்கு தெரிவிக்க தயங்காதீர்கள்’ என்றார். இதை கேட்ட அதிகாரி ஒருவர், ‘அமைச்சரே இப்படி சொல்லிட்டதால, ஆளுங்கட்சியினர் இனி நம்ம பக்கமே வர மாட்டாங்க’ என முணுமுணுக்க, சக அதிகாரிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ