உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மதுரையை மறக்காம இருக்காங்களே!

மதுரையை மறக்காம இருக்காங்களே!

தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின், 80ம் ஆண்டு விழா மதுரையில் நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'பொதுவாக, மேடையில் உள்ள அனைவருக்கும் வணக்கம் மட்டும் கூறிவிட்டு நிகழ்வு குறித்து பேசிவிடுவேன். ஆனால், பல தலைமுறைகளாக தொழில் துவங்கி நன்கு வளர்த்த பலர் இங்கு உள்ளனர். அவர்களை பற்றி பேச விரும்புகிறேன். 'சேமியா நிறுவனம் ஒன்றின் வளர்ச்சி குறித்து கேட்டேன். அவர்கள் தயாரிப்பு எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதுபோல் நான் சின்ன வயசிலிருந்தே பார்த்த, பிரபல கூல்டிரிங்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் கேட்டேன். இன்றும் அவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது...' என, தொடர்ந்து பேசினார். இதை கேட்ட வியாபாரி ஒருவர், 'என்னதான் டில்லியில் பெரிய பதவியில் இருந்தாலும், தான் பிறந்த மதுரையை மறக்காம இருக்காங்களே...' என கூற, சக வியாபாரிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை