மிரண்டு ஓடாம இருக்கணும்!
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில், பரந்துார் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில், உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன், செல்வம் எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர்.விழாவிற்கு வந்த அவர்களை வரவேற்ற தி.மு.க.,வினர், மாட்டு வண்டியில் அமர வைத்தனர். வாலாஜாபாத் ஒன்றிய தி.மு.க., சேர்மன் தேவேந்திரன், விழா நடைபெற்ற மண்டபம் வரை, மாட்டு வண்டியை தானே ஓட்டிச் சென்றார். மாட்டு வண்டியை பின்தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் பேரணி போல சென்றனர்.இதை பார்த்த ஒருவர், 'அது சரி... இவங்க பண்ற அலப்பறையை பார்த்து மாடு மிரண்டு ஓடாம இருக்கணும்...' என, முணுமுணுக்க, உடன் சென்றவர்,'தி.மு.க.,வினர் அதெல்லாம் ஏற்கனவே பழக்கப்படுத்தி தான் வச்சிருப்பாங்க...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.