உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இதுவரை சரியா செய்யலையோ?

 இதுவரை சரியா செய்யலையோ?

சென்னை கொரட்டூரில், தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு பங்கேற்றார். கூட்டத்துக்கு பின், பத்திரிகையாளர்களிடம் சேகர்பாபு கூறுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில், மக்களின் முதல்வர் ஸ்டாலினை இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக்க சபதம் ஏற்றிருக்கிறோம். எந்த சூழல் நிலவினாலும், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., கொடி தான் பட்டொளி வீசி பறக்கும். 'கடந்த ஆண்டுகளை விட இன்னும் சிறப்பாக மக்கள் நலப் பணிகளை செய்து, இந்தியாவே போற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை படைப்பார்' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அப்படின்னா, இதுவரை நடந்த ஆட்சியில், மக்கள் நலப் பணிகளை சரியா செய்யலைங்கிறதை அமைச்சர் ஒப்புக் கொள்கிறாரோ...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Yes your honor
ஜன 09, 2026 10:10

சேகர் பாபு வாழ்க, வாழ்க, வாழ்க, பல்லாண்டு நிடூடி வாழ்க. இவர் ஒருத்தரால் தான் திமுக என்னும் கொரோனாவை முழுவதுமாக ஒழித்து தமிழகத்திற்கு உண்மையான விடியலைத் தரமுடியும். வரும் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் திமுகவிற்கு எதிராக பொங்கி எழுவதற்கு இவரின் பொன்னான வார்த்தைகளும், புல்லரிக்க வைக்கும் நடவடிக்கைகளும், இந்துக்களின் மீதான இவரின் பூப்போன்ற செயல்களும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். எனவேதான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் சேகர் பாபு வாழ்க, வாழ்க, வாழ்க, பல்லாண்டு நிடூடி வாழ்க.


Yes your honor
ஜன 09, 2026 09:59

அவ்வளவெல்லாம் தமிழக ஊடகங்களுக்கு மக்கள் மீதோ அல்லது மக்களின் நலனின் மீதோ அல்லது பத்திரிகை என்னும் ஒவ்வொருவரின் வீட்டிற்கே சென்று அவர்களின் மனதையும் புத்தியையும் ஊடுருவும் பிரம்மாஸ்திரம் போன்ற ஒரு பெரிய வலிமை மிக்க ஆயுதத்திற்கு உண்டான தர்ம ஞாயங்களைப் பற்றியோ கவலை கிடையாது. நல்லது கெட்டதை ஆராயாமல் திரு. மோடி அவர்களை குறைகூறிவிட்டால் இவர்களின் ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் சுயநலவாதிகள் தான் இன்று பத்திரிகை என்னும் அறத்தை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய துறையில், தமிழகத்தில் சாபக் கேடாக, ஊடுருவியுள்ளனர்.


D.Ambujavalli
ஜன 09, 2026 06:36

அடுத்த முயற்சியில் தேர்வில் வெல்லுவோம் என்றால் 'வாத்தியார் சம்சாரம் மூத்தாள் பதிவிரதை' என்பது போலத்தான் இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை